Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திக்விஜய்யின் "செல்பி புள்ள" படத்தை "செல்பி வித் டாட்டர்" படத்துடன் இணைத்த யு.எஸ். நாளிதழ்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திக்விஜய் சிங்கும், அவரது காதலி அம்ரிதா ராயும் மீண்டும் ஒரு ஊடகத்தில் செய்தியாக அடிபட்டுள்ளனர். இந்த முறை இந்த செய்திக்கு காரணம் நியூயார்க் டைம்ஸ் இதழ்தான்.

நரேந்திர மோடி #SelfieWithDaughter என்று அறிவித்துள்ளார். அதாவது தங்களது மகள்களுடன் செல்பி எடுத்துக் கொண்டு அதை போஸ்ட் செய்யுங்கள் என்று அழைத்துள்ளார் மோடி. இதையடுத்து பலரும் தங்களது மகள்களுடன் செல்பி எடுத்து அனுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த ஹேஷ்டேக் டிவிட்டரில் பிரபலமாகியுள்ளது குறித்து நியூயார்க் டைம்ஸ் ஒரு செய்தி போட்டுள்ளது. அதில் பல புகைப்படங்களையும் போட்டிருந்தது. அதில் கூட்டத்தோடு கூட்டமா திக்விஜய் சிங்கும், அம்ரிதா ராயும் மிக நெருக்கமாக, மகா நெகிழ்ச்சியாக போஸ் கொடுத்த காதல் படங்களையும் போட்டு விட்டனர்.

உண்மையில் இந்தப் படம் பலான படமாகும். அதாவது திக்விஜய் சிங்கும், அவரது காதலியும் மிக நெருக்கமான கோலத்தில் இருக்கும் இப்படம் கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்பாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் படத்தைக் கொண்டு போய் அப்பா, மகள் வரிசையில் சேர்த்து விட்டது நியூயார்க் டைம்ஸ்.

உண்மையில் இந்தப் படத்தை ஒருவர் டிவிட்டரில் காமெடியாக பகிர்ந்திருந்தார். அதில் மோடி செல்பி வித் டாட்டர் என்று கூறுகிறார். திக்விஜய்யோ செல்பி வித் டாட்டர் லைக் கேர்ள் என்று சொல்கிறார் என்று கிண்டலடித்திருந்தார். அதைத்தான் நியூயார்க் டைம்ஸ் தவறுதலாக எடுத்து விட்டது.

அம்ரிதா ராய், ராஜ்யசபா டிவியில் ஆங்கராக இருந்தவர். திக்விஜய் சிங்கின் வயதில் பாதி வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+