கழிப்பறை கட்ட முடியாட்டி உங்க மனைவியை ஏலம் விடுங்க.. நீதிபதி பேச்சால் சர்ச்சை

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஔரங்கபாத்: கழிப்பறை கட்ட பண வசதி இல்லாவிட்டால் மனைவியை விற்றுவிடுங்கள் அல்லது ஏலத்துக்கு விடுங்கள் என்று பீகார் மாவட்ட நீதிபதியின் பேச்சால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

பீகார் மாவட்ட மாஜிஸ்டிரேட்டாக உள்ளவர் கன்வால் தனுஜ். அவர் மகாராஷ்டிர மாநிலம், ஔரங்கபாத் மாவட்டத்தில் உள்ள ஜம்ஜோர் கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், வீட்டில் கழிப்பறை இல்லாததால் பெண்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதையை கழித்து வருகின்றனர். இதனால் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும். மேலும் பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

 கையை உயர்த்துங்கள்

கையை உயர்த்துங்கள்

ரூ.12 ஆயிரம் இருந்தால் கழிப்பறைக் கட்டிவிடலாம். இங்கு யாராவது ரூ.12 ஆயிரத்தை விட தங்கள் மனைவியை தாழ்வாக நினைப்பவர்கள் கையை உயர்த்துங்கள் என்றார்.

 மரியாதை கொடுங்கள்

மரியாதை கொடுங்கள்

அப்போது கையை உயர்த்தி ஒருவர் கழிப்பறை கட்ட தன்னிடம் பணம் இல்லை என்றார். அப்போது பேசிய நீதிபதி, நீங்கள் எவ்வளவு ஏழையாக இருந்தாலும் உங்கள்
மனைவியின் கௌரவத்துக்கும், பாதுகாப்புக்கும் மரியாதை கொடுங்கள்.

 விற்று விடுங்கள்

விற்று விடுங்கள்

வெறும் ரூ. 12 ஆயிரத்துக்காக உங்கள் மனைவியை கௌரவ குறைவாக நடத்துவது தவறு. வீட்டில் கழிப்பறை கட்ட வசதி இல்லை என்றால், உங்கள் மனைவியை எங்கேயாவது விற்று விடுங்கள் அல்லது ஏலத்துக்கு விடுங்கள். அதன் பிறகு கழிப்பறை கட்ட பணமில்லை என்று கூறுங்கள் என்றார்.

A Bihar Woman Was Illtreated in Hyderabad Rehabilation Center-Oneindia Tamil
 நீதிபதிக்கு அழகா

நீதிபதிக்கு அழகா

பல்வேறு விவாகரத்து வழக்குகள், பலாத்கார வழக்குகள் உள்ளிட்டவற்றுக்கு நியாயமான தீர்ப்பு வழங்கும் பொறுப்பில் உள்ள ஒரு நீதிபதி இதுபோன்று பொது இடம் நாகரீகம் பேசியது அனைவரையும் அதிரச்சியில் ஆழ்த்தியது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Bihar DM Kanwal Thanuj says that if anyone does not have money to build toilet, then he should sell his wife.
Please Wait while comments are loading...