பொது இடத்தில் ஆடைகளை களைந்து அடிப்பேன்... சிவசேனா எம்.எல்.ஏ மிரட்டியதாக மும்பைப் பெண் புகார்
மும்பை: பொது இடத்தில் அனைவர் முன்னிலையிலும் ஆடைகளைக் களைந்து அடிப்பேன் என சிவசேனா எம்.எல்.ஏ ஒருவர் மிரட்டியதாக மும்பையில் பெண் ஒருவர் போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
மும்பை கிழக்கு பந்தரா காந்திநகர் சங்கம் பகுதியை சேர்ந்த 50 வயது என்ற பெண் ஒருவர் பாந்தராவில் உள்ள கேர்வாடி பகுதி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர், ‘கிழக்கு பந்தரா தொகுதி எம்.எல்.ஏ பிரகாஷ் பால சவந்த் (64), அனைவர் முன்னிலையிலும் எனது ஆடைகளை அகற்றி என்னை அடிப்பேன் என மிரட்டினார் எனத் தெரிவித்துள்ளார்.
பெண்ணின் புகாரின் பேரில் போலீசார் 3 பிரிவுகளில் எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
புகார் தொடர்பாக செய்தியாளர்களிடம் அப்பெண் கூறியதாவது:-
பெண்களுக்கு எதிராக அவமானபடுத்தும் வகையில் பேச யாருக்கும் உரிமை இல்லை. ஒரு எம்.எல்.ஏ எல்லோருக்கும் முன்னிலையில் பகிரங்கமாக இவ்வாறு பேசுவது மிகவும் மோசமான செயலாகும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, சிவசேனா எம்.எல்.ஏ குறித்து அப்பெண் போலீசில் புகார் அளித்துள்ள தகவல் அறிந்து போலீஸ் நிலையத்திற்கு வெளியெ குவிந்த நூற்றுக்கணக்கான சிவசேனா தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸ் அவர்களை அமைதிப் படுத்தினர்.


Click it and Unblock the Notifications
