ஃபேஸ்புக்கில் முஸ்லீம்களுக்கு எதிராக கருத்து: அஸ்ஸாமில் டிஎஸ்பி சஸ்பெண்ட்
டிஸ்பூர்: ஃபேஸ்புக்கில் முஸ்லீம்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள கார்பி அங்லோங் மாவட்ட துணை எஸ்.பி. அஞ்சன் போரா. அவர் ஜனவரி மாதம் 28ம் தேதி முதல் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்துள்ளார்.

அவரின் கருத்துகளுக்கு அவரது நண்பர்கள் ஆதரவு அளித்துள்ளனர். தொழுகைக்கு முஸ்லீம்களை அழைக்கும் பாங்கை கூறவிடாமல் நிறுத்திக் காட்டுவதாக அவர் ஃபேஸ்புக்கில் சபதம் எடுத்துள்ளார். மேலும் காங்கிரஸ் உறுப்பினரும், இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவருமான ரபிக்குல் இஸ்லாம் உள்ளிட்ட பல சிறுபான்மையினரை கொன்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜெய் ஸ்ரீராம், ஜெய் இந்துஸ்தான், ஜெய் ஜெய் ஸ்ரீராம், ஜெய் இந்துபூமி. முஸ்லீம்கள் இல்லாத இந்துஸ்தான் என்று எல்லாம் அவர் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரது கருத்தால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்தது. அவரை கைது செய்யவும், காவல் துறையில் இருந்து நீக்குமாறும் கோரிக்கை எழுந்தது.
அவர் மீது காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஃபேஸ்புக்கில் முஸ்லீம்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக அஞ்சன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே அஞ்சன் ஃபேஸ்புக்கில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளை தற்போது நீக்கிவிட்டார்.
தனது ஃபேஸ்புக் கணக்கை யாரோ ஹேக் செய்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுள்ளதாகவும் அஞ்சன் போரா தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications