பீகார் முன்னாள் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி மரணம்
பாட்னா: பீகார் மாநில பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் ராஜ்யசபா எம்பியுமான சுஷில் குமார் மோடி புற்று நோய் பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 72.
பீகார் மாநில பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷில் மோடி காலமானார். அவருக்கு வயது 72. முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான சுஷில் மோடி புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் தான் தனக்கு புற்று நோய் பாதிப்பு இருப்பதாக வெளிப்படையாக கூறியிருந்தர்.

உடல் நலத்தை காரணம் காட்டி லோக்சபா தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் கூறியிருந்த சுஷில் மோடி, இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். பீகாரில் 2017 ஆம் ஆண்டு முதல் 2020 வரை துணை முதல்வராகவும் பதவி வகித்துள்ளார்.
பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு நெருக்கமானவராகவும் சுஷில் குமார் மோடி அறியப்பட்டார். சுஷில் குமார் மோடி உயிரிழந்து இருப்பது பீகாரில் பாஜக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தொண்டர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
சுஷில்குமார் மோடி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:- பல தசாப்தங்களாக எனது நண்பராகவும் கட்சியின் மதிப்புமிக்க சக உறுப்பினருமாக இருந்த சுஷில் குமார் மோடி மறைவு வருத்தத்தை தருகிறது. பீகாரில் பாஜக வளர்வதற்கும் வெற்றிகரமாக இருக்கவும் சுஷில் குமார் மோடி முக்கிய பங்காற்றினார்" என்று கூறியுள்ளார்.
அதேபோல் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கூறியிருப்பதாவது:- அரசியலின் ஒரு சிறந்த முன்னோடியை பீகார் இழந்துவிட்டது. சுஷில் குமார் மோடியின் அரசியல், ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. சுஷில் குமார் மோடியின் மறைவால் பீகார் அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நீண்ட காலத்திற்கு நிரப்ப முடியாது" என்று கூறியுள்ளார்.
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'சுஷில் குமார் மோடி மரணம் அடைந்தது மிகவும் வேதனையை தருகிறது. என்னுடன் நீண்ட காலம் அவர் பணியாற்றினார். தனிப்பட்ட முறையிலும் சுஷில் குமார் மோடிக்கும் எனக்கும் நல்லுறவு இருந்தது. எனது உண்மையான நண்பரை நான் இழந்துவிட்டேன்" என்று கூறியுள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications