மே.வங்கத்திலும் லோக்சபா தேர்தலில் போட்டியிட அஞ்சும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள்
கொல்கத்தா: தமிழகத்தைப் போலவே மேற்கு வங்க மாநிலத்திலும் லோக்சபா தேர்தலில் போட்டியிட அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் பலரும் விரும்பவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க எந்த ஒரு கட்சியும் முன்வரவில்லை. இதனால் அக்கட்சி தனித்துப் போட்டியிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டால் டெபாசிட் கூட கிடைக்காது என்பதால் ஜி.கே.வாசன், கே.வி. தங்கபாலு உள்ளிட்ட பல மூத்த காங்கிரஸ் தலைவர்கள் நாங்கள் தேர்தலிலேயே போட்டியிடவில்லை என்று பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.
இதேபோல் மேற்கு வங்க மாநிலத்திலும் காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லையாம். அம்மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுக்குப் பிறகுதான் ஓரிரு தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெல்ல முடியும் என்ற நிலை. அதுவும் எதிர்வரும் தேர்தலில் காங்கிரஸுக்கு சவாலாக இருக்கும்.
இந்நிலையில் அம்மாநில மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மனாஸ் பூனியா, பிரதீப் பட்டாச்சார்யா உள்ளிட்டோர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தும் அதை நிராகரித்துவிட்டனர். ஒவ்வொரு மாநிலங்களிலும் காங்கிரஸ் தலைவர்கள் இப்படி தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்குவதால் காங்கிரஸ் மேலிடம் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளதாக கூறப்படுகிறது.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
எம்பினு கூட பார்க்கலையே.. மம்தா மருமகன் அபிஷேக் பானர்ஜியை ஓடஓட விரட்டி தாக்கிய மக்கள்.. ஷாக் -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications