டிவி நடிகர் பிரதீப் சாவில் திடீர் திருப்பம்.. தலை, உடம்பில் ரத்தக்காயங்கள்.. கொலையா என சந்தேகம்!
டிவி நடிகர் பிரதீப் குமார் தலை மற்றும் உடம்பில் ரத்தக்காயங்கள் இருப்பதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் போலீசார் சந்தேகித்துள்ளனர்.
ஹைதராபாத்: டிவி நடிகர் பிரதீப் குமாரின் தலை மற்றும் உடம்பில் ரத்தக்காயங்கள் இருப்பதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். இதுதொடர்பாக பிரதீப்பின் மனைவி பவானி மற்றும் வீட்டில் தங்கியிருந்த உறவுக்கார இளைஙஞரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை தொடங்கியுள்ளனர்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட டிவி சீரியல்களில் நடித்து வந்த நடிகர் பிரதீப் குமார் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இளம் நடிகர், திருமணம் செய்து ஓராண்டுக்குள் தற்கொலை செய்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பொருளாதார நெருக்கடியே பிரதீப் குமாரின் தற்கொலைக்கு காரணம் என கூறப்பட்டது. அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தலை, உடம்பில் காயங்கள்
இந்நிலையில் நடிகர் பிரதீப்குமாரின் தலை மற்றும் உடலில் ரத்தக்காயங்கள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறியுள்ள போலீசார், தற்கொலையை மர்ம மரணமாக மாற்றி விசாரித்து வருகின்றனர்.

விசாரணையை திருப்பிய போலீஸ்
தூக்கில் பிணமாக தொங்கிய நடிகர் பிரதீப் தலையில் ரத்தக் காயம் உள்ளது என்றும், எனவே அவரது சாவில் மர்மம் இருப்பதாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்படுகிறது என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரதீப் குமாரின் மனைவி பவானி மற்றும் வீட்டில் தங்கியிருந்த ஷிராவண் என்ற உறவுக்கார இளைஞர் பக்கம் விசாரணை திருப்பியுள்ளனர்.

அலங்கோலமாய் கிடந்த அறை
பிரதீப் தூக்கில் தொங்கிய அறையை போலீசார் சோதனை நடத்தியபோது தரையிலும், படுக்கையிலும் ரத்தக் கறைகள் இருந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்த பொருட்கள் உடைந்து தாறுமாறாக சிதறி கிடந்தன. கண்ணாடிகளும் உடைந்து அறையே அலங்கோலமாய் இருந்தது. இதனால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது.

விளக்கமளித்த மனைவி
இதுகுறித்து பிரதீப்பின் மனைவியான நடிகை பவானியிடம் விசாரித்த போது கதவு மூடியிருந்ததால் ஜன்னலை உடைத்தோம். அதனாலேயே கண்ணாடிகள் சிதறின எனக்கூறினார்.ஷிராவணிடம் நடத்திய விசாரணையில் பிரதீப் அனுமதியோடுதான் வீட்டில் தங்கினேன் என்றும் சிலர் அதனை தவறாக பேசியதாகவும் கூறியுள்ளார்.

செல்போன்களை கைப்பற்றி விசாரணை
இதைத்தொடர்ந்து பிரதீப் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான பாவனி, வீட்டில் தங்கி இருந்த உறவுக்கார இளைஞர் ஷிராவண் ஆகியோரின் செல்போன்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். பாவனியின் உறவுக்கார இளைஞரான ஷிராவண் என்பவர் இரண்டு மாதங்களாக அவர்களுடன் ஒரே வீட்டில் தங்கி இருக்கிறார்.

வேறொருவரின் படம்
சமீபத்தில் பாவனி தனது வாட்ஸ் அப் புரஃபைலில் ஷிராவணுடன் சேர்ந்து இருப்பது போன்ற படத்தை வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இது பிரதீப்புக்கு பிடிக்கவில்லை என்றும், இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே கொலையா? தற்கொலையா? என்பது தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications