சீரியல் கில்லர் சர்க்கார்... லஞ்ச் டைமில் பெண்களைக் கொல்லும் கொடூர கொலையாளி கைது

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: சினிமாவை மிஞ்சும் கிரைம் திரில்லர் இது. பலஹீனமான இதயம் உள்ளவர்கள் இந்த செய்தியை படிக்க வேண்டாம். ரொம்ப பில்டப் கொடுக்குறோம்னு நினைக்காதீங்க இது நிஜமாகவே ரத்தத்தை சில்லிட வைக்கும் நிஜமான கிரைம் ஸ்டோரி. மேற்கு வங்க மாநிலத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. லஞ்ச் டைமில் தனிமையில் அசந்து இருக்கும் பெண்களை கொடூரமான முறையில் பலாத்காரம் செய்து கொலை செய்யும் சீரியல் கொலையாளியை கைது செய்துள்ளனர்.

சீரியல் கொலையாளியின் பெயர் சர்க்கார். கடந்த மாதம் 21ஆம் தேதி புதுல் மக்ஜி என்ற பெண்ணை கொன்ற வழக்கில் கைது செய்த போலீசார், 12 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அவனிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான பல உண்மைகள் வெளி வந்தன.

சர்க்கார் கொலை செய்யும் பாணியே தனியானது. மத்தியான நேரத்தில் தனிமையில் இருக்கும் பெண்கள்தான் இவனது டார்கெட். அதுமாதிரி இருக்கும் வீடுகளை முதலிலேயே நோட்டம் விட்டு வைத்துக்கொள்வான்.

ஆபத்தை உணர்த்தும் சிவப்பு ஹெல்மெட்

ஆபத்தை உணர்த்தும் சிவப்பு ஹெல்மெட்

சிவப்பு நிற மோட்டர் பைக்கில் நீட்டாக உடை அணிந்து சிவப்பு நிற ஹெல்மெட் அணிந்து வீடுகளை கவனிப்பான் சர்க்கார். மத்தியான நேரத்தில் உண்ட மயக்கத்தில் இருக்கும் பெண்கள் தனித்து இருக்கும் வீடுகளில் காலிங் பெல் அழுத்துவான். இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று யோசனையில் கதவை திறப்பார்கள். அரை மயக்கத்தில் இருக்கும் பெண்கள்தான் அவனது டார்க்கெட்டாக இருக்கும்.

தனித்து இருக்கும் பெண்கள்

தனித்து இருக்கும் பெண்கள்

மின்சார ரீடிங் எடுப்பது போல வீட்டிற்குள் நுழைந்து சைக்கிள் செயின் இரும்பு ராடினால் அடித்து காயப்படுத்தி அவர்களை மயங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்வான். அதோடு விட்டு விட்டால் கூட பரவாயில்லை. கனமான இரும்பு பொருட்களால் அடித்து துவம்சம் செய்து விடுவான்.

தொடர் கொலைகள்

தொடர் கொலைகள்

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பர்த்வான், ஹூக்லி மாவட்டங்கள் பெண்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். தனிமையில் இருக்கும் பெண்கள் பிற்பகல் நேரத்தில் இரும்பு போன்ற கனமான பொருட்களைக் கொண்டு தாக்கப்பட்டிருந்தனர். நகை, பணம் திருடு போயிருந்தது. அந்த பெண்களும் பலாத்காரத்திற்கு ஆளாகியிருந்தனர்.

சீரியல் கில்லர்

சீரியல் கில்லர்

பெண்களை இத்தனை கொடூரமாக தாக்கி கொல்லும் கொலையாளி யார் என்று கண்டு பிடிப்பதில் பர்த்வான், ஹூக்லி மாவட்ட காவல்துறைக்கு கடும் சவாலாக இருந்தது. இந்த நிலையில்தான் கடந்த மே மாதம் 21ஆம் தேதி கோரா கிராமத்தில் புதுல் மஜ்கி என்ற பெண் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருந்தார்.

சிக்கிய சர்க்கார்

சிக்கிய சர்க்கார்

இந்த கொலை வழக்கில்தான் 42 வயதான சர்க்காரை காவல்துறையினர் கடந்த ஞாயிறன்று கைது செய்தனர். மாவட்ட நீதிமன்றத்தில் அவனை ஆஜர்படுத்திய போலீசார் 12 நாட்கள் கஸ்டடி எடுத்துள்ளனர். கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த நான்கு கொலைகளும் இதே போல இருந்தது. எனவே அந்த கொலைகளுக்கும் சர்க்காருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர் கொலைகள்

தொடர் கொலைகள்

சில பெண்கள் சர்க்காரின் தாக்குதலில் இருந்து தப்பியுள்ளனர். அதிகம் முரண்டு பிடிக்கும் பெண்கள் சண்டை போடும் பெண்களை தலையில் பலமாக தாக்கி அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதை உறுதி செய்த பின்னரே அங்கிருந்து நகர்வானாம். என்னா ஒரு வில்லத்தனம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+