என்னதான் நடக்குது? தொடரும் நிலநடுக்கம்.. அதிகாலையில் குலுங்கிய அந்தமான்.. ரிக்டரில் 4.9 ஆக பதிவு
நிலநடுக்கம் காரணமாக மொத்தமாக துருக்கி நாடே 10 மீட்டர் நகர்ந்து உள்ளதாக ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.
அன்காரா; அந்தமான் தீவின் கடல் பகுதிகளில் அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவு ஆகி உள்ளது.
துருக்கியில் கடந்த மாதம் மாபெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி நிலநடுக்கம் இந்த வருடத்தில் நடைபெற்ற மிகப்பெரிய பேரழிவாக பார்க்கப்படுகிறது. எதிர்பார்த்ததை விட மிக மோசமான பேரழிவாக பார்க்கப்படுகிறது. கடந்த 50 வருடங்களில் துருக்கி சந்தித்த மிக மோசமான நிலநடுக்கமாக, பேரழிவாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.
துருக்கியில் 50 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நிலநடுக்கம் காரணமாக படுகாயம் அடைந்துள்ளனர். சிரியாவில் நிலநடுக்கம் காரணமாக 6 ஆயிரம் பேர் வரை படுகாயம் அடைந்து உள்ளனர்.

தொடர் நிலநடுக்கம்
துருக்கி, சிரியா நிலநடுக்கத்தை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து ஏற்பட தொடங்கி உள்ளன. உலக அளவில் பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து சிறிதும், பெரியதுமாக நிலநடுக்கங்கள் ஏற்படுவது மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்தமான் தீவின் கடல் பகுதிகளில் அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவு ஆகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. அதிகாலையில் கடல் பகுதியில் இந்த அதிர்வுகள் உணரப்பட்டு உள்ளன. இந்த நிலநடுக்கம் காரணமாக பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டதாக கூறப்படவில்லை.

நிலநடுக்கம்
மாயபண்டர் பகுதியில் இருந்து 67 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதகிப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. துருக்கியில் நிலநடுக்கம் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரமாக அதிகரித்து உள்ளது. சிரியாவில் இதுவரை10 ஆயிரம் பேர் நிலநடுக்கம் காரணமாக பலியாகி உள்ளனர். துருக்கியின் காஜியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், ஒஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர் மற்றும் கிலிஸ் ஆகிய துருக்கி நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த 10 நகரங்கள் மிக மோசமான பாதிப்பை அடைந்து உள்ளன.

மோசமான பாதிப்பு
துருக்கி பொதுவாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் ஆக்டிவ் நிலநடுக்க பகுதியாகும். துருக்கி நிலநடுக்கம் காரணமாக கிட்டத்தட்ட 100 கிமீ தூரத்திற்கு பால்ட் லைன் பாதிப்பு இதனால் ஏற்பட்டு உள்ளது. அதாவது 100 கிமீ தூரத்திற்கு தரையில் அடுக்குகள் இரண்டாக பிளந்து நகர்ந்து உள்ளன. 100 கிமீ தூரத்திற்கு நில அடுக்குகள் பிரிந்து பிளவுபட்டு இருக்கிறது. அந்த அளவிற்கு மோசமான நிலநடுக்கம் அங்கே ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கத்தோடு இல்லாமல் அடுத்தடுத்து உலக அளவில் பல நாடுகளில் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு நியூசிலாந்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. நியூசிலாந்து வெலிங்டன் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் 6.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் பல்வேறு கட்டிடங்கள், வீடுகள் இடிந்தன. ஆனால் இதனால் பெரிய உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

உயிரிழப்பு
அதேபோல் பிலிப்பைன்சில் அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவான நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. ஆனால் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. பின்னர் ரோமானியாவில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கொலம்பியாவில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல் அமெரிக்காவின் ஓசன் வியூ பகுதியில் 4.8 அளவில் இன்னொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. டாங்கோவில் 5.3 ரிக்டர் அளவில் கூடுதலாக ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவிலும் சிறிய அளவில் அங்கங்கே நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
இந்தோனேசியாவை தாக்கிய நிலநடுக்கம்! சரிந்து விழுந்த கட்டிடங்கள்.. ஒருவர் உயிரிழப்பு! -
இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டிடங்கள்.. அலறியடித்து வீதிகளுக்கு ஓடிய மக்கள்! வீடியோ -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications