Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"குழந்தைசாமி"யை குஷிப்படுத்தப் போகும் புதிய பெண்கள் படை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தன்னைக் குஷிப்படுத்த ஒரு அழகிகள் கூட்டத்தை தயார்படுத்துமாறு வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளார்.

"pleasure troupe" என்று இந்தப் படைக்குப் பெயர். முற்றிலும் இளம் பெண்கள் மட்டுமே இந்தப் படையில் இருப்பார்கள். இவர்களது வேலையே கிம்மை குஷிப்படுத்தி, அவரது டென்ஷனைக் குறைப்பதுதான்.

ஏற்கனவே ஒரு குஷிப்படை உள்ளது. அந்தப் படையை கிம்மின் தந்தை கிம் ஜோங் உல் உருவாக்கியிருந்தார். ஆனால் அதில் இருந்த பலருக்கும் வயதாகி விட்டது. எனவே அதைக் கலைத்து விட்டு தனக்கேற்றவாறு புதிய படையை உருவாக்க உத்தரவிட்டுள்ளாராம் மகன் கிம்.

இந்தப் பெண்கள் படை குறித்த சில தகவல்கள் இங்கே...

புதிய குஷிப்படை...

புதிய குஷிப்படை...

கிம் ஜோங் இல் இறந்து 3 வருடங்கள் முடிந்து விட்டன. அந்த ஊரில் ஒருவர் இறந்தால் 3 ஆண்டுகள் துக்கம் அனுசரிக்கப்படும். எனவேதான் 3 ஆண்டு நிறைவுக்குப் பின்னர் புதிய குஷிபடையை உருவாக்க உத்தரவிட்டுள்ளாராம் கிம்.

எச்சரிக்கை...

எச்சரிக்கை...

கிம் ஜோங் உல்லை குஷிப்படுத்த அமைக்கப்பட்ட படையில் இடம் பெற்றிருந்த பெண்களுக்கு, இறந்து போன கிம் குறித்த பல ரகசியங்கள் தெரியும். எனவே அவர்களை அவரவர் ஊர்களுக்கு அனுப்புவதற்கு முன்பு, யாரும் எந்தத் தகவலையும் வெளியில் சொல்லக் கூடாது என்று கடுமையாக எச்சரித்துள்ளனராம்.

அரசு உதவிகள்...

அரசு உதவிகள்...

இந்த குஷிப்படையில் இடம் பெறும் பெண்களுக்கு ஊதியமாக தலா 4000 அமெரிக்க டாலர் தரப்பட்டதாம். மேலும் வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் அரசே தந்து விடுமாம்.

பாதி சம்பளம்...

பாதி சம்பளம்...

இதுபோக கிம் ஜோங் இல்லின் வீடுகளில் வேலைக்காரப் பெண்களாக, கிளீனர்களாக இருந்தவர்களுக்கு இதில் பாதி சம்பளமாக தரப்பட்டதாம்.

கிம் இல் சுங்...

கிம் இல் சுங்...

இந்த குஷிப்படையை வட கொரியாவின் நிறுவனரான கிம் இல் சுங் உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இன்று வரை சுங்குக்கு அங்கு பெரும் மரியாதை தந்து வருகிறார்கள் அந்த நாட்டினர்.

அழகான பெண்கள்...

அழகான பெண்கள்...

சுங், உயிருடன் இருந்தபோது கிராமப்பகுதிகளுக்கு ஆட்களை அனுப்பி அழகான இளம் பெண்களை அழைத்து வருவார்களாம். அவர்களை பாட வைத்தும், டான்ஸ் ஆட வைத்தும் ஆட்களைத் தேர்வு செய்வாராம் சுங்.

பேரழகிகள்...

பேரழகிகள்...

அவர்களில் சுமாரான அழகிகளை வீட்டு பணிப்பெண்களாக அனுப்பி விடுவார்களாம். மிக மிக அழகாக, இருப்பவர்களுக்கு மட்டும்தான் சர்வாதிகாரியின் அருகில் இருக்கும் "பாக்கியம்" கிடைக்குமாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+