மோடி சர்க்காரில் 7 பெண் அமைச்சர்கள்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் 7 பெண் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் சுஷ்மா ஸ்வராஜ் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழுவில் இடம்பெறக் கூடும்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 45 மத்திய அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். இவர்களில் 23 பேர் கேபினட் அமைச்சர்கள். 10 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள். 12 பேர் இணை அமைச்சர்கள். இந்த 45 பேரில் 7 பேர் பெண்கள்.

சுஷ்மா ஸ்வராஜ்
மோடி அமைச்சரவையில் சீனியர் பெண் அமைச்சர் சுஷ்மாதான். வெளியுறவுத் துறை அமைச்சர் பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழுவில் சுஷ்மா இடம்பெறலாம்.

நஜ்மா ஹெப்துல்லா
1980ஆம் ஆண்டு முதல் ராஜ்யசபா எம்.பியாக இருந்து வரும் 74 வயது நஜ்மா ஹெப்துல்லா இவர்களில் மிகவும் மூத்தவர்.

ஸ்மிரிதி இரானி
38 வயதான ஸ்மிரிதி இரானிதான் மோடி அமைச்சரவையில் இளம் வயதுடையவர்.

உமாபாரதி, மேனகா, ஹர்சிம்ரத் கவுர்
மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரான உமாபாரதி, முன்னாள் மத்திய அமைச்சரான இந்திரா குடும்பத்தை சேர்ந்த மேனகா காந்தி, பஞ்சாப் முதல்வர் பாதலின் மருமகன் ஹர்சிம்ரத் கவுர் ஆகியோர் இதர கேபினட் அமைச்சர்களாவர்.

ஹர்சிம்ரத் கவுர்
பாஜக கூட்டணிக் கட்சிகளின் சார்பில் கேபினட்டில் இடம்பிடித்த ஒரே பெண் சிரோமணி அகாலிதளத்தைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர்.

நிர்மலா சீதாராமன்
6 பெண் கேபினட் அமைச்சர்கள் மட்டுமில்லாது பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இவர் தற்போது எம்.பியாக இல்லை. 6 மாதங்களுக்குள் ராஜ்யசபா அல்லது லோக்சபா எம்.பியாக இவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

மன்மோகன் அரசில்..
கடந்த மன்மோகன்சிங் அரசில் கிரிஜா வியாஸ், சந்திரேஸ் கடோச் ஆகிய இரு பெண் அமைச்சர்கள்தான் இருந்தனர்.

அதிகமாகும் வாய்ப்பு
நாட்டிலேயே முதல் முறையாக 61 பெண் எம்.பிக்கள் இப்போதுதான் தேர்வாகி இருக்கின்றனர். ராஜ்யசபாவில் 29 பெண் எம்பிக்கள் உள்ளனர். இதனால் மோடி அமைச்சரவையில் பெண் அமைச்சர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications