திருடர்களே ஜாக்கிரதை.. இந்த வருங்கால ஐபிஎஸ் அதிகாரி நிஜ ஸ்பைடர்மேன்.. படபடனு சுவர்ல ஏறிடுவாரு!
கான்பூரை சேர்ந்த 7 வயது சிறுவன் ஒருவன் எந்த பிடிமானமும் இல்லாமல் சுவரில் ஏறி அசரடித்து வருகிறான்.
கான்பூர்: எந்த பிடிமானமும் இல்லாமல் சுவரில் ஏறி அசரடிக்கும் 7 வயது கான்பூர் சிறுவனை நிஜ ஸ்பைடர் மேன் என வர்ணிக்கின்றனர் உள்ளூர் மக்கள்.
Recommended Video
சூப்பர் ஹீரோ கேரக்டர்களில் பெரும்பாலானோருக்கு பிடித்த கேரக்டர் ஸ்பைடர்மேன். கையில் இருந்து சிலந்தி வலைகளை பீய்ச்சி அடித்து, மதில்விட்டு மதில் தாவும் ஸ்பைடர்மேனின் சாகசங்களுக்கு ரசிகர்கள் அடிமை என்றே கூறலாம்.
ஸ்பைடர்மேன் கேரக்டரை பார்த்து நிஜ வாழ்விலும் பல சிறுவர்கள் அதுபோல் முயற்சிக்கிறார்கள். பல சமயங்களில் அது ஆபத்தாகவே முடிகிறது. ஆனால் கான்பூரை சேர்ந்த 7 வயது சிறுவன் ஒருவன், ஸ்பைடர் மேன் போலவே எந்த பிடிமானமும் இல்லாமல் மதில் மீது ஏறி அசர வைக்கிறான்.

ஸ்பைடர்மேன் ஆசை
கான்பூர் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன் யஷ்ரத் சிங் கவுருக்கு ஸ்பைடர்மேன் என்றால் கொள்ளை பிரியம். ஸ்பைடர்மேன் சுவரில் ஏறுவதைப் பார்த்து, தானும் அப்படி ஏறிப் பழக ஆரம்பித்திருக்கிறான் யஷ்ரத். முதலில் அவனது செயலை பார்த்து பெற்றோர் பயந்து போய் தடுத்திருக்கின்றனர்.

பயம் போய் ஊக்கம்
ஆனால் யஷ்ரத் விடாமல் சுவரில் ஏறி முயற்சிப்பதை கவனித்த பெற்றோர் ஒரு கட்டத்துக்கு பிறகு அவனை ஊக்கப்படுத்த ஆரம்பித்தனர். இதையடுத்து தொடர் பயிற்சியின் மூலம் எத்தனை பெரிய சுவரையும், எந்த பிடிமானமும் இல்லாமல் ஏற பழகிவிட்டான் யஷ்ரத்.

முயற்சி
"ஸ்பைடர்மேன் படத்தை பார்த்த பிறகு எனக்கும் அப்படி சுவர் ஏற வேண்டும் என ஆசை வந்தது. வீட்டில் அப்படி சுவர் ஏறி பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். முதலில் கீழே விழுந்துவிட்டேன். பிறகு தொடர் பயிற்சியின் மூலம் இப்போது நன்றாக சுவர் ஏற கற்றுக்கொண்டேன். என்னுடைய சகோதரன் இதை எல்லோரிடமும் கூறிவிட்டான்", என்று தனது சுவர் ஏறும் கதையை பற்றி கூறுகிறான் சிறுவன் யஷ்ரத்.

நிஜ ஸ்பைடர்மேன்
வருங்காலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பது தான் யஷ்ரத்தின் கனவு. அதற்காக தன்னை இப்போதே உடல் அளவில் தயார்ப்படுத்தி வருவதாக கூறுகிறான் இந்த மூன்றாம் வகுப்பு மாணவன். யஷ்ரத்தின் இந்த சுவர் ஏறும் வீடியோக்களை பார்த்த உள்ளூர் மக்களும், நெட்டிசன்களும் அவனை நிஜ ஸ்பைடர்மேன் என்றே அழைக்கின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications