நாடாளுமன்ற வளாகத்தில் கடும் மோதல்! பாஜக எம்பிக்கள் மண்டை உடைப்பு- முகேஷ் ராஜ்புத் எம்பி சீரியஸ்!
டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி, பாஜக எம்பிக்களுக்கு இடையே இன்று கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பாஜக எம்பி பிரதாப் சாரங்கியின் மண்டை உடைந்து ரத்தம் வழிந்தோடிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இம்மோதலில் படுகாயமடைந்த மற்றொரு பாஜக எம்பி முகேஷ் ராஜ்புத், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
அண்ணல் அம்பேத்கர் குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு நாடாளுமன்றம் முதல் நாட்டின் பட்டி தொட்டி எங்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி மற்றும் பாஜக எம்பிக்கள் இடையே கடுமையான மோதலும் ஏற்பட்டது.

மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலக கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் நீல நிற உடைகளில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு பாஜக கூட்டணி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.
அப்போது நாடாளுமன்றத்துக்குள் செல்ல லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முயற்சித்தார். ஆனால் பாஜக எம்பிக்களோ அவரைத் தடுத்து தள்ளிவிட்டனர். இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டு பின்னர் மோதலாக வெடித்தது.
இந்த மோதலில் பாஜக எம்பி பிரதாப் சாரங்கி மண்டை உடைந்தது. அவர் தலையில் ரத்தம் வழிந்தோடிய நிலையில் வீல் சேரில் அமர வைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதேபோல மற்றொரு பாஜக எம்பி முகேஷ் ராஜ்புத் எம்பியும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்ற மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் எம்பிக்களுக்கான சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
இதனிடையே நாடாளுமன்றத்துக்குள் தங்களை நுழையவிடாமல் தடுத்த பாஜக எம்பிக்கள் மீது லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் இந்தியா கூட்டணி எம்பிக்கள் புகார் தெரிவித்தனர். அத்துடன் நாடாளுமன்ற வளாகத்தில் மீண்டும் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications