ஷாருக் கார் மீது கல்வீச்சு... குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு
அகமதாபாத்: நடிகர் ஷாருக் கானின் கார் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இந்த கல்வீச்சுச் சம்பவம் இன்று காலை நடந்தது. இருப்பினும் சம்பவத்தின் போது ஷாருக் கான் காரில் பயணிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.
அடையாளம் தெரியாத சிலர் திடீரென ஷாருக் கான் கார் மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்கியுள்ளனர். அவர்களைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

ரயீஸ் என்ற படத்தின் ஷூட்டிங்கில் தற்போது ஷாருக் கான் பிசியாக உள்ளார். அதில் சில காட்சிகளை குஜராத்தில் படமாக்குகின்றனர். இதற்காக குஜராத் வந்துள்ளார் ஷாருக்.
Actor Shahrukh Khan is shooting for his upcoming film 'Raees' in Ahmedabad (Gujarat).
— ANI (@ANI_news) February 14, 2016
சகிப்புத்தன்மை விவகாரம் தொடர்பாக முன்பு கருத்து தெரிவித்திருந்தார் ஷாருக் கான். அது முதலே அவருக்கு எதிராக சிலர் தொடர்ந்து கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். போராட்டங்களையும் நடத்தியுள்ளனர். குறிப்பாக சிவசேனா கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். மேலும் பாஜகவினரும் கூட போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில் பாஜக ஆட்சியின் கீழ் உள்ள குஜராத்தில் ஷாருக் கான் கார் தாக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications