மனைவி புகார் எதிரொலி.. பிசிசிஐ வீரர்கள் காண்டிராக்ட் லிஸ்ட்டிலிருந்து ஷமி டிஸ்மிஸ்!
பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இருந்து முகமது ஷமி பெயர் இடம்பெறவில்லை.
Recommended Video

டெல்லி: பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இருந்து முகமது ஷமி பெயர் இடம்பெறவில்லை. சி மற்றும் பி வீரர்கள் பட்டியலில் இடம்பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது புதிதாக வெளியாகி இருக்கும் பட்டியலில் அவர் பெயர் இல்லை. அதேபோல் வீரர்களின் சம்பளத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
இன்றுதான் ஷமியின் மனைவி அவரை புகார் அளித்து இருந்தார். ஷமி நிறைய பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக புகார் அளித்து இருந்தார்.

புகார் அளித்தார்
ஷமி தன்னை கொலை செய்ய முயற்சி செய்ததாக அவரது மனைவி ஹசின் ஜகான் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார். ஷமி பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறினார். அவர் செய்த ஆபாசமான சாட்களை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். அதேபோல் அவர் எந்தெந்த பெண்களுடன் தொடர்பில் இருக்கிறார் என்றும் கூறினார்.

தொடர்பு
அதேபோல் இந்த விஷயம் அனைத்தும் பிசிசிஐ அமைப்பிற்கு தெரியும் என்றும் அவர் கூறினார். ஆனாலும் பிசிசிஐ இதில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். இதனால் பிசிசிஐ அமைப்பு மீதும் பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தார்கள்.

இல்லை
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் பிசிசிஐ வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் முகமது ஷமி பெயர் இடம்பெறவில்லை. இவ்வளவு நாள் சி மற்றும் பி வீரர்கள் பட்டியலில் மாறி மாறி ஷமி இடம்பெற்று இருந்தார். ஷமியின் பெயர் அனைத்து பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது.

இல்லை
பொதுவாக முன்னாள் வீரர்கள் பெயர்தான் பட்டியலில் இருந்து எடுக்கப்படும். ஆனால் முதல்முறையாக ஷமி பெயர் அணியில் இருக்கும் போதே பட்டியலில் இருந்து எடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான காரணத்தை பிசிசிஐ அமைப்பு இன்னும் தெரிவிக்கவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications