For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கள்ள ஓட்டு போடுங்கள்: தொண்டர்கள் மத்தியில் மத்திய அமைச்சர் சரத்பவார் பேச்சு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மந்திய விவசாயத்துறை அமைச்சருமான சரத்பவார் தொண்டர்களை கள்ள ஓட்டு போட சொன்னதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

நவிமும்பையில் பிரசாரத்தில் ஈடுபட்ட சரத்பவார், தொண்டர்களை இரண்டு முறை ஓட்டு போட கோரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிராவில் உள்ள சாத்ரா தொகுதியில் ஏப்ரல் 17ம் தேதியும், நவி மும்பை தொகுதியில் 24ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது.

Sharad Pawar’s speech triggers bogus voting row

இந்நிலையில் சரத்பவார் தனது தொண்டர்களிடம், முதலில் சாத்ரா தொகுதியில் ஓட்டு போடுங்கள். பின்னர் நவிமும்பை தொகுதியிலும் உங்கள் ஓட்டுகளை பதிவு செய்யுங்கள். அதற்குள் அடையாள மையை அழித்துவிடலாம் என்று கூறியுள்ளார். மத்திய அமைச்சர் சரத்பவாரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இது இந்தியாவின் தேர்தல் விதிகளை மீறும் விதமாக உள்ளது என்று கண்டனங்கள் எழுந்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்போவதாக பாஜக தலைவர் வினோத் தாவ்டே கூறியுள்ளார்.

சரத்பவார் மீது தேர்தல் ஆணையம் நடவடிகை எடுக்குமா ?

English summary
Union minister and Nationalist Congress Party (NCP) chief Sharad Pawar's suggestion on Sunday to Mathadi workers (head-loaders) to vote twice this Lok Sabha elections may land him in trouble. Opposition parties have accused him of encouraging bogus voting and said they would report his statement to the Election Commission (EC) of India as well as the police
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X