ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகள் ஷர்மிஸ்தா படுதோல்வி! 6,102 ஓட்டுதான் கிடைச்சது!!
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா படுமோசமான தோல்வியைத் தழுவினார். அவர் மொத்தமே 6,102 வாக்குகள்தான் வாங்கியுள்ளார்.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபை தொகுதியில் 67 இடங்களைக் கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியோ 3 இடங்களில்தான் வென்றுள்ளது.

காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத படுதோல்வியாக ஒரு இடத்தில் கூட வெல்லாமல் முட்டை வாங்கியுள்ளது. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளரான அஜய் மக்கான் உட்பட அனைவருமே தோற்றுப் போயுள்ளனர்.
இதில் காங்கிரஸ் வேட்பாளராக கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் போட்டியிட்ட ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா படுதோல்வியைத் தழுவியுள்ளார். அவர் வாங்கிய மொத்த வாக்குகள் எண்ணிக்கையே 6,102தான்.
இத்தொகுதியில் ஆம் ஆத்மியின் சரவுவ் பரத்வாஜி 57, 589; பா.ஜ.க.வின் ராகேஷ் குமார் 43, 006 வாக்குகளைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Maybe AAP won because all the Bongs in Delhi listened to Mamata Banerjee and voted for AAP? Never underestimate the power of Didi.
— Brown Sahiba (@Rajyasree) February 10, 2015 இதனிடையே டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மியை திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி ஆதரித்ததால் டெல்லி வாழ் மேற்கு வங்க மாநிலத்தவர் ஆம் ஆத்மிக்கே வாக்களித்துவிட்டார்களோ? அதனால்தான் பிரணாப் முகர்ஜி மகளும் தோல்வியை சந்திக்க நேர்ந்ததோ என்று ட்விட்டர்வாலாக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications