தரூர் என் அம்மாவை கொன்றிருக்க மாட்டார்: சொல்கிறார் சுனந்தாவின் மகன்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய அமைச்சர் சசி தரூர் தனது தாயை கொலை செய்திருக்க வாய்ப்பே இல்லை என்று சுனந்தா புஷ்கரின் மகன் ஷிவ் மேனன்(21) தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,

சசி தரூருக்கும் என் அம்மாவுக்கும் இடையே பிரச்சனை இருந்தபோதிலும் அவர்கள் ஒருவரையொருவர் காதலித்தனர். சசி என் அம்மாவை கொலை செய்திருக்கவே முடியாது. அவர் என் அம்மாவை தாக்கியிருக்கவும் மாட்டார். அவர் தற்கொலை செய்திருக்கவும் மாட்டார். என் அம்மாவின் மரணம் அமைதியானது. அவர் தூக்கத்திலேயே இறந்துவிட்டார். அவரது ஆன்மாவை சாந்தியடைய விடுங்கள்.
என் அம்மா ஒரு தேவதை. அவர் இந்த உலகை விட்டுவிட்டு நல்ல இடத்திற்கு சென்றுவிட்டார். அங்கிருந்து நம்மை பார்த்து புன்னகை புரிகிறார் என்றார்.












Click it and Unblock the Notifications