எந்தரோ மாகானுபாவலு... மூளை ஆபரேஷனின் போது பாட்டுப் பாடி அசத்திய பெண் நோயாளி... பெங்களூருவில்!
பெங்களூரு: பெங்களூருவில் மூளைப் பகுதியில் நடந்த ஆபரேஷனின் போது, நோயாளி ஒருவர் மூன்றரை மணி நேரம் பாடியும், பேசியும் ஆச்சர்யப் படுத்தியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் புர்த்வானைச் சேர்ந்த 34 வயது பெண் ஒருவர் சமீபகாலமாக கடும் தலைவலி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகளால் அவதிப் பட்டு வந்தார். இது தொடர்பாக பெங்களூரு சீதா படேஜா மருத்துவமனை மருத்துவர்கள் அவரைச் சோதனை செய்து பார்த்த போது, அவரது மூளையில் ஆபரேஷன் ஒன்று செய்ய வேண்டி இருந்தது தெரிய வந்தது.

மிகவும் சிக்கலான அந்த ஆபரேஷனால் நோயாளியின் பேச்சுத் திறன் பறி போகும் அபாயம் இருந்தது. எனவே, நோயாளியை பேசியபடியே இருக்கச் செய்து அந்த ஆபரேஷனை செய்வது என மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி, வலி மரத்துப் போகும் ஊசியை மட்டும் போட்டு, அப்பெண்ணிற்கு தலையில் மூளைப் பகுதியில் ஆபரேஷன் நடத்தப்பட்டது. அப்போது அவரிடம் வாரத்தில் எத்தனை நாட்கள் உள்ளன. இது என்ன படம், உங்களுக்குப் பிடித்த மியூசிக் என்ன என்பது குறித்து தொடர்ந்து டாக்டர்கள் பேசியபடி இருந்தனர். அவரும் பதிலளித்து வந்தார். மேலும் தனக்குப் பிடித்த ரபீந்திரா சங்கீதத்தைப் பாடியபடியும் இருந்தார்.
சுமார் மூன்றரை மணி நேரம் நடந்த இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது. இந்த ஆபரேஷனுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் செலவானதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் அப்பெண் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என மருத்துவர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
இம்மாத துவக்கத்தில் இதேபோல் பிரேசிலில் நடந்த மூளை ஆபரேஷன் நோயாளி கிடார் வாசித்து டாக்டர்களுக்கு ஒத்துழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications