ராகுல் ‘அதுக்கெல்லாம்’ சரிப்பட்டு வரமாட்டார்… சொல்வது ஷீலா தீக்ஷித்
டெல்லி: தலைமைப்பதவிக்கு ராகுல்காந்தி சரிப்பட்டு வரமாட்டார், அவர் பொறுப்பானவர் அல்ல, காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தியே நீடிக்க வேண்டும் என்று டெல்லி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளது டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்புத் தீயை பற்றவைத்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுலுக்கு அளிப்பதில் ஆரம்பம் முதலே கட்சிக்குள் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் ராகுல் காந்தி தலைவர் ஆவதை விரும்பவில்லை என்று அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன்காரணமாகவே ராகுல்காந்தி திடீரென மாயமானதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் ராகுல்காந்தி தலைமை பொறுப்புக்கு வருவது பற்றி ஷீலா தீக்ஷித் செய்தி நிறுவனம் ஒன்றிர்க்கு அளித்துள்ள பேட்டி மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சோனியாதான் தலைவர்
ராகுல் காந்திக்கு கட்சித் தலைவர் பதவி அளிப்பதில் எனக்கு தயக்கம் உள்ளது. தலைவர் பதவியில் சோனியா காந்தி நீடிப்பதையே நான் ஆதரிக்கிறேன். மக்களிடையே கட்சிக்கு செல்வாக்கை உருவாக்க சோனியா காந்தியால் மட்டும்தான் முடியும். அவர் மீது கட்சியினர் முழு நம்பிக்கை வைக்கலாம்.
ராகுல்காந்தி மீது சந்தேகம்
ஆனால், ராகுல் காந்தியின் தலைமைத் திறனை இதுவரை முழுமையாக சோதித்துப் பார்த்ததில்லை. அவரது ஆளுமைத் திறன் மீது சந்தேகம் எழுகிறது. இப்போதைய நிலையில் சோனியாவே கட்சித் தலைவராக நீடிப்பது கட்சிக்கு நன்மை பயக்கும். அவரின் தலைமையை இதுவரை யாரும் குறை கூறவில்லை.
நம்பிக்கையில்லை
அதேநேரம் ராகுலின் தலைமைப் பண்பு தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவர் சிறப்பாக செயல்பட்டதாகத் தெரியவில்லை. அவர் மீது அவ நம்பிக்கை உள்ளது. ராகுல் செயல்பாடு குறித்து கட்சியினரிடம் நம்பிக்கை வளர வேண்டும். ஆனால், இப்போதே இவரது தலைமைப் பண்பு குறித்து மதிப்பிடுவது சரியாக இருக்காது.
பொறுப்பு கிடையாது
கட்சித் தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து சோனியா தான் இறுதி முடிவெடுக்க முடியும். என்னைப் பொறுத்தவரை சோனியாவே தலைவராக நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் பொறுப்பை தட்டிக்கழித்துவிட்டு ஓடுபவர் அல்ல.
சோனியா நம்பகமானவர்
மத்தியில் இரண்டு முறை பிரதமர் பொறுப்பேற்கும் வாய்ப்பு சோனியா காந்திக்கு கிடைத்தது. ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. அவர் நம்பகமான தலைவர். அவரைத்தான் கட்சியினரும் மக்களும் நம்புகின்றனர்.
போராட்ட குணம்
இப்போதும்கூட விவசாயிகளின் நலன் காக்க நிலம் கையகப்படுத்துதல் மசோதாவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து அவர் போராடி வருகிறார். ஆனால் ராகுல்காந்திக்கு அந்த போராட்ட குணம் இருக்கிறதா என்று தெரியவில்லை.
இளம் ரத்தம் பாய்ச்சுக
கட்சியின் காரிய கமிட்டியை மாற்றி அமைக்க வேண்டும். கட்சிக்கு புதிய ரத்தத்தை பாய்ச்ச வேண்டும். இளம் தலைவர்கள் ஜோதிராதித்ய சிந்தியா, ஜிதின் பிரசாத் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளிக்கலாம்.
பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்திக்கு முக்கிய பொறுப்பு அளிப்பது குறித்து காங்கிரஸ் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். பிரியங்கா மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. கட்சிக்காக மீண்டும் தீவிரமாகப் பணியாற்ற தயாராக இருக்கிறேன். ஆனால், நானாக எந்தப் பொறுப்பும் கேட்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
தப்பா போட்டுட்டாங்கப்பா
ஷீலா தீட்சித்தின் பேட்டி குறித்து கட்சித் தலைமை கடும் அதிருப்தி அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் அவரிடம் விளக்கம் கோரியபோது, எனது பேட்டி திரித்து வெளியிடப் பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
டெல்லி திரும்பும் ராகுல்
ராகுல் காந்தி கட்சிப் பணிகளில் இருந்து விலகி விடுப்பில் சென்றிருப்பதாக கடந்த பிப்ரவரி 20-ம் தேதி காங்கிரஸ் தலைமை அறிவித்தது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அவர் பங்கேற்கவில்லை. தற்போது ராகுல் வெளிநாட்டில் முகாமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் எந்த நாட்டில் உள்ளார் என்பது மர்மமாகவே உள்ளது. இன்று அவர் டெல்லி திரும்புவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விவசாயிகள் பேரணி
இந்நிலையில் 55 நாட்களுக்கு பிறகு வரும் 19ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் பேரணியில் அவர் பங்கேற்பார் என்று கட்சித் தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் அவர் வருவாரா? பேரணியில் பங்கேற்பாரா என்பது ராகுல்காந்திக்கும், சோனியா காந்திக்கும் மட்டுமே தெரிந்த உண்மை.
-
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன












Click it and Unblock the Notifications