• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

ஷில்பா ஷெட்டி விவாகரத்து! ராஜ் குந்த்ரா என்ன சொல்கிறார்?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மும்பை: பாலிவுட் பட உலகில் நடிகைகள் தொழிலதிபர்களை திருமணம் செய்து கொள்வதும் விவாகரத்து செய்வதும் சகஜமான விசயம். அப்படித்தான் நடிகை ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா தம்பதிகள் விவாகரத்து நோக்கி சென்று கொண்டு இருக்கின்றனர் என்று கடந்த சில தினங்களாகவே பாலிவுட் உலகில் உலா வந்து கொண்டிருக்கும் செய்தியை ராஜ் குந்த்ரா மறுத்துள்ளார்.

நான் பிசியாக இருப்பதால் என்னுடன் அதிக நேரத்தை செலவழிக்க முடியவில்லை என்று தனது நண்பர்களிடம் ஷில்பா கூறி வந்தார். இதை தவறாக புரிந்து கொண்டு, நாங்கள் விவகாரத்து செய்ய இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தியில் உண்மை இல்லை என்று கூறியுள்ளார் ராஜ் குந்த்ரா.

பாலிவுட் பட நாயகி ஷில்பா ஷெட்டி, தமிழில் விஜய் நடித்த குஷி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடும் அளவிற்கு படு டல்லாக இருந்தார். லண்டன் சேனல் 4 நிறுவனம் நடத்திய பிக் பிரதர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஓவர் நைட்டில் புகழின் உச்சிக்குப் போய் விட்டார்.

பிக் பிரதர் நிகழ்ச்சியில் வென்றதன் மூலம் இந்தியாவில் மட்டுமல்லாது இங்கிலாந்தும் ஷில்பாவுக்கு ரசிகர்கள் கூடி விட்டார்கள். அதன் பின்னர் கிட்டத்தட்ட மிஸ் யுனிவர்ஸ், மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்ற லெவலுக்கு மாறினார் ஷில்பா.

காதல் முறிவு

காதல் முறிவு

திருமணத்திற்கு முன்னர் நடிகை ஷில்பாஷெட்டி அக்ஷய் குமார் காதல் வெகு பரபரப்பாக பாலிவுட்டிட்டில் பேசப்பட்டது. பிறகு என்ன காரணமோ இவர்களின் காதல் முறியவே, அக்ஷய், டுவிங்கிளை மணந்து கொண்டார்.

தொழிலதிபருடன் காதல்

தொழிலதிபருடன் காதல்

ஷில்பா ஷெட்டி சிறிதும் தாமதிக்காமல் தொழிலதிபர் ராஜ் குந்ராவை காதலித்தார். லண்டனைச் சேர்ந்த இந்தியத் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா என்பவருக்கும், ஷில்பாவுக்கும் இடையே காதல் உருவாகி விட்டதாக 2007ம் ஆண்டே கிசுகிசு கிளம்பியது.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

இந்த கிசுகிசுவை உண்மையாக்கும் விதமாக ராஜ் குந்ரா முதல் மனைவி கவிதாவை விவாகரத்து செய்துவிட்டு 2009ம் ஆண்டில் ஷில்பாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். ஷில்பாவை விட ராஜ் குந்தா ஒரு வயது இளையவர்.

ஒற்றுமையான தம்பதிகள்

ஒற்றுமையான தம்பதிகள்

என்னுடைய பெற்றோர் திருமணமாகி 35 ஆண்டுகள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த மாதிரி தாம்பத்யம் அமைவதையே விரும்புகிறேன். திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பதில் நம்பிக்கை கொண்டவள் நான். எனது திருமணமும் சொர்க்கத்தில்தான் நிச்சயிக்கப்பட்டிருக்கும் என்று கூறினார் ஷில்பா.

ஆண்குழந்தை

ஆண்குழந்தை

ஷில்பா - தொழிலதிபர் ராஜ் குந்த்ரா திருமணமாகி 3 ஆண்டுகள் கழிந்த பின்னர் கடந்த 2012ம் ஆண்டு இந்த தம்பதியருக்கு ஆண்குழந்தை பிறந்தது. இந்த குழந்தையில் 4வது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடிய நிலையில் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு விட்டதாகவும், விவாகரத்து செய்யப்போவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இந்த வதந்தியை மறுத்துள்ளார் ராஜ் குந்த்ரா.

மூச்சுவிடக்கூட நேரமில்லை

மூச்சுவிடக்கூட நேரமில்லை

மாதுங்காவில் உள்ள அலுவலகத்தில் தினமும் 20 மணி நேரம் உழைக்கிறேன். சாப்பிட, தூங்க, மூச்சுவிட நேரம் இல்லை. குளிப்பதற்கு, ஆடை மாற்ற மட்டுமே வீட்டுக்கு வருகிறேன் என்று தெரிவித்துள்ளார் ராஜ் குந்த்ரா.

மனைவியை கடத்துவேன்

மனைவியை கடத்துவேன்

வரும் 8ஆம் தேதி ஷில்பாவின் பிறந்த நாள். அன்று ஒரு சர்ப்ரைஸ் விருந்து அளிக்க ஏற்பாடு செய்து வருகிறேன். ஷில்பா என்னுடைய இளவரசி. ஒரு இரவு அவரை கடத்திச் செல்ல உள்ளேன் என்றும் கூறியுள்ளார் எப்படியோ ஷில்பா சொன்னது போல 35 ஆண்டுகாலம் ஒற்றுமையாக இருந்தால் சரிதான்.

English summary
Rumours have been rife that that all’s not well between actress Shilpa Shetty and her husband Raj Kundra.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X