பாட்னாவில் குண்டு வெடித்தபோது பாலிவுட் விழாவில் உள்துறை அமைச்சர்: பா.ஜ.க கண்டனம்

பீகார் தலைநகர் பாட்னாவில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் பிரசாரக் கூட்டத்தில் அடுத்தடுத்து 6 இடங்களில் குண்டு வெடித்தது. ஞாயிறு காலையில் பாட்னா ரெயில் நிலையத்தில் 2 குண்டுகள் வெடித்தன. இந்த 8 குண்டு வெடிப்புகளில் சிக்கி 6 பேர் பலியானார்கள். 83 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகள் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த குண்டுவெடிப்புக்கு மாநில அரசின் பாதுகாப்பு குளறுபடியே காரணம் என்று பாஜக குறை கூறி வருகிறது.
இதற்கிடையே குண்டுவெடிப்பு நடந்த சில மணி நேரத்திற்குப் பிறகு மும்பையில் நடந்த ரஜ்ஜோ இந்திப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கலந்துகொண்டார்.
நாட்டின் சட்டம் ஒழுங்கு பொறுப்பை ஏற்றிருக்கும் ஷிண்டே, அவரது ஊரைச் சேர்ந்த விஸ்வாஸ் பாட்டீல் இயக்கிய படம் என்பதால் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
"பாட்னாவில் குண்டுவெடிப்பு நடந்திருக்கும் போது நிலைமையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றிருக்கிறார். இது காங்கிரஸ் உள்துறை அமைச்சர் மற்றும் பிற அமைச்சர்களின் பழக்கமாக மாறிவிட்டது.
நல்லாட்சியில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக தங்கள் ஆடைகள் மற்றும் இசையில் கவனம் செலுத்துகிறார்கள்" என்று மாநில பாஜக தலைவர் சித்தார் நாத் சிங் நிருபர்களிடம் கூறினார்.
குண்டுவெடிப்பு நடந்தது முதல் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிட்டதாகவும், தேசிய புலனாய்வு அமைப்பை அனுப்பி வைத்ததாகவும் அமைச்சர் ஷிண்டே விளக்கம் அளித்துள்ளார். ஆனால் இந்த விளக்கத்தை பாஜக ஏற்க மறுத்துள்ளது.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications