ராகுல், மோடி.. சண்டை போடாம பிரசாரம் பண்ணுங்கப்பா.. ஷிண்டே 'அட்வைஸ்'!
டெல்லி: பிரசாரத்தின்போது ஒருவரை ஒருவர் தூண்டும் வகையில் பேசக் கூடாது என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கும் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே அறிவுரை கூறியுள்ளார்.
இது காங்கிரஸ் தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மோடிக்கு மட்டும் அட்வைஸ் பண்ண வேண்டியதுதானே. எதுக்கு ராகுலையும் கோர்த்து விடுகிறார் ஷிண்டே என்று சிலர் காங்கிரஸில் முனுமுனுத்துள்ளனர்.
ஆனால் இது நட்பு ரீதியான அட்வைஸ்தான் என்று ஷிண்டே தரப்பு விளக்கியுள்ளது.

மாறி மாறி சண்டை
மோடியும், ராகுலும் தங்களது பிரசாரங்களில் மாறி மாறி காங்கிரஸையும், பாஜகவையும் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.

ராகுல் எப்படிப் பேசுகிறார்
பாஜகதான் மதக் கலவரத்தைத் தூண்டுகிறது என்று ராகுல் காந்தி பல இடங்களில் குற்றம் சாட்டிப் பேசியுள்ளார்.

மோடி இப்படிப் பேசுகிறார்
உடனே காங்கிரஸின் கரங்கள் ரத்தக் கறை படிந்துள்ளது. அந்தக் கொடும் கரத்துக்கு வாக்களிக்காதீர்கள் என்று மோடி பேசுகிறார்.

தேர்தல் கமிஷனிடம் பஞ்சாயத்து
இவர்களது பேச்சு குறித்து இரு கட்சியினருமே தேர்தல் ஆணையத்தில் பஞ்சாயத்தைக் கூட்டியுள்ளனர்.

அதெல்லாம் எதுக்குப்பா...
இந்த நிலையில்தான் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இதுகுறித்து ஷிண்டே கூறுகையில், யாரும் யாரையும் தூண்டும் வகையில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். சட்டத்திற்குட்பட்டு யாருமே பேச வேண்டும்.

ராகுலையா சொன்னீர்கள் தலைவா...??
இதையடுத்து ராகுலுக்கும் சேர்த்து அட்வைஸ் செய்கிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பட்டென்று சுதாரித்த ஷிண்டே. நீங்க கேட்ட கேள்விக்கு பொதுவாக பதிலளித்தேன் என்று சமாளித்து விட்டார் ஷிண்டே.
-
லம்பாக அமவுண்டை அமுக்கிய தலைகள்.. ராகுலுக்குப் போன மெசேஜ்! அடுத்தடுத்த ஆக்ஷனுக்கு தயாராகும் காங்.,! -
தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம்.. புதிய தலைவர் மாணிக்கம் தாகூர்? ராகுல் காந்தி கிரீன் சிக்னல்? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications