மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: 125 தொகுதிகள் கேட்டு அடம் பிடிக்கும் பாஜக! தொடர் அதிருப்தியில் சிவசேனா!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் கால் நூற்றாண்டு கால பாரதிய ஜனதா -சிவசேனா கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. 125 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பதில் பாஜக பிடிவாதம் காட்டி வருகிறது.
மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு அக்டோபர் 15-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் எப்படியும் வென்று ஆட்சியைப் பிடித்துவிடுவோம் என்பது பாஜக மற்றும் சிவசேனாவின் கணக்கு.

பாஜகவைப் பொறுத்தவரையில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 135 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறது. சிவசேனாவோ கடந்த 2009-ல் போட்டியிட்ட 169 தொகுதிகளில் போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறது.
இதனால் இரு கட்சிகள் இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தை முறிந்தது. இந்த நிலையில் மும்பையில் பாஜக தலைவர் அமித்ஷா, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
{ventuno}
அப்போது பாஜகவின் சுயமரியாதையை கூட்டணிக்காக விட்டுக் கொடுக்க முடியாது என்று கூறியிருந்தார். அத்துடன் சிவசேனாவுக்கு பாஜக 12 மணி நேர கெடு விதித்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் 125 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி சற்று இறங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து சிவசேனா எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வருகிறது. இதனால் இந்த கூட்டணியில் குழப்பம் நீடிக்கிறது.
-
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார்











Click it and Unblock the Notifications