சரியான ஃபைட் கொடுத்தாருய்யா.. ராகுலை புகழ்ந்து தள்ளும் சிவ சேனா!
குஜராத்தில் பாஜகவுக்கு காங்கிரஸ் டஃப் கொடுத்ததாக ராகுல்காந்தியை சிவ சேனா கட்சி புகழ்ந்து தள்ளியுள்ளது.
Recommended Video

மும்பை: குஜராத்தில் பாஜகவுக்கு காங்கிரஸ் கடுமையான டஃப் கொடுத்ததாக ராகுல்காந்தியை சிவ சேனா கட்சி புகழ்ந்து தள்ளியுள்ளது.
குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச சட்டசபைகளுக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்றது.
இதன்படி இருமாநிலங்களிலும் பாஜகவின் வெற்றி உறுதியாகியுள்ளது. இருப்பினும் தொடக்கத்தில் பாஜகவுக்கு காங்கிரஸ் கட்சி இரு மாநிலங்களிலும் கடும் போட்டி கொடுத்தது.

ஒரு கட்டத்தில் முந்தியது
தொடக்கத்தில் முன்னிலை வகித்த பாஜக போக போக காங்கிரஸுடன் சமநிலைக்கு வந்து போட்டி போட்டது. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் பாஜகவை முந்தியது.

பாஜக வெற்றி உறுதி
இதனால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இருப்பினும் 2 தொகுதிகளிலும் பாஜக வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது.

ராகுலுக்கு புகழாரம்
குஜராத் மற்றும் ஹிமாச்சலில் ஆட்சியமைக்கவுள்ள பாஜகவுக்கு அக்கட்சி தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக கூட்டணி கட்சியான சிவசேனா, காங்கிரஸ் கடுமையான போட்டி கொடுத்ததாக அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை புகழ்ந்துள்ளது.

நெருக்கடி கொடுத்தார்
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே 47 வயதான அமேதி எம்பி, பழமையான ஒரு கட்டத்தில் பெருமைமிகுந்த பழமையான ஒரு கட்சியை நெருக்கடியில் தள்ளினார் என புகழாரம் சூட்டினார்.

சேனாவின் பிரச்சார பீரங்கி
சிவ சேனாவின் பிரச்சார பீரங்கியானா சாமனா நாளிதழ் ராகுல்காந்திக்கு வாழ்த்து தெரிவித்து தலையங்கம் வெளிட்டுள்ளது. அதில் ஒரு நெருக்கடியான கட்டத்தில் ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பெற்றுள்ளார் என கூறப்பட்டுள்ளது.

வாழ்த்துவதில் ஆட்சேபனை இல்லை
அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் அந்த தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் சிவசேனா எதிர்க்கட்சியான காங்கிரஸை புகழ்ந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications