ஆம் ஆத்மியை காப்பி அடிக்கும் சிவசேனா!: மும்பையில் இலவச குடிநீர் அளவு உயர்கிறது

Subscribe to Oneindia Tamil

மும்பை: டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்தது முதல் பல அரசியல் கட்சிகள் தூக்கத்தை தொலைத்திருக்கின்றன. ஆம் ஆத்மி பாணியில் மும்பையில் இலவச குடிநீர் வழங்கும் அளவை கூடுதலாக்கப் போவதாக இப்போது சிவசேனா அறிவித்திருக்கிறது.

டெல்லியில் ஆட்சிப் பொறுப்பேற்ற ஆம் ஆத்மி மின் கட்டணம் குறைப்பு, இலவச குடிநீர் திட்டம் என அடுத்தடுத்து அறிவித்த உறுதிமொழிகளை நிறைவேற்றி வருகிறது. அத்துடன் பிற மாநிலங்களிலும் ஆம் ஆத்மி கட்சி களமிறங்க முடிவு செய்திருக்கிறது.

Shiv Sena Executive President Uddhav Thackeray with son Aditya Thackeray

ஆம் ஆத்மி கண்வைத்துள்ள மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்று என்பதால் ஆளும் காங்கிரஸ் கட்சி உஷாரானது. மின்கட்டணத்தை மாற்றி அமைக்கப் போவதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்தது.

இப்போது காங்கிரஸைத் தொடர்ந்து சிவசேனாவும் ஆம் ஆத்மி பாணியில் வாக்குறுதி கொடுத்திருக்கிறது. மும்பை மாநகராட்சி சிவசேனா வசம் இருக்கிறது.

மும்பை மாநகராட்சி மிகக் குறைந்த மானிய விலையில் தற்போது 566 லிட்டர் குடிநீரை வழங்கி வருகிறது. இது இலவசத்தைப் போலவே கருதப்படுகிறது. இதை இனி 1075 லிட்டராக உயர்த்தி தரப்போவதாக சிவசேனா அறிவித்துள்ளது. இதன் மூலம் வாக்காளர்களைக் கவர முடியும் என கணக்கு போடுகிறது சிவசேனா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+