ஜம்மு காஷ்மீர்- பாஜகவின் அராஜகம், பேராசையை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது: சிவசேனா தாக்கு
காஷ்மீரில் பாஜகவின் பேராசையால் நிகழும் சம்பவங்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என்கிறது சிவசேனா.
மும்பை: ஜம்மு காஷ்மீரில் பாஜகவின் அராஜகம், பேராசையால் நிகழ்ந்து வரும் சம்பவங்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா சாடியது.
இது தொடர்பாக சாம்னாவில் எழுதப்பட்டுள்ள தலையங்கம்:

பிரதமர் நரேந்திர மோடி தேசத்தை ஒரு குழந்தை விளையாட்டைப் போல நடத்திக் கொண்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாஜக அதிகாரத்துக்கு வர பேராசைப்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் இதற்கு முன்னர் இப்படி ஒரு அழிவை ராணுவம் சந்தித்தது. இப்படி ரத்த ஆறுகள் ஓடியது இல்லை. நமது ராணுவத்தினரின் உயிரிழப்புகள் ஏற்பட்டது இல்லை.
பாஜக- பிடிபி ஆட்சிக் காலத்தில்தான் இத்தனையும் நடந்தேறியிருக்கிறது. பாஜகவின் பேராசைக்காக இந்த தேசம் பெரும் விலையை கொடுத்திருக்கிறது. இதை வரலாறு ஒரு போதும் மன்னிக்காது.
காஷ்மீரில் முந்தைய காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் அரசே பரவாயில்லை என மக்கள் நினைக்கின்றனர். காஷ்மீர மக்கள் ராணுவ வீரர்களைத் தாக்குகின்றனர். பயங்கரவாதிகள் ராணுவ நிலைகளைத் தாக்குகின்றனர். ராணுவ வீரர்களும் அப்பாவி பொதுமக்களும் தங்களது உயிரை பறிகொடுத்து வருகின்றனர்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் பயங்கரவாத செயல்கள் பல்லாயிரம் மடங்கு அதிகரித்துவிட்டன. பாகிஸ்தான் ஊடுருவல்கள் அதிகரித்துவிட்டன.
யுத்தம் இல்லாத சூழலில் ராணுவ வீரர்கள் உயிரிழப்புகள் தொடருகிறது. இத்தனையையும் தடுத்த் நிறுத்த முடியாமல் இருக்கிறது.
இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா!












Click it and Unblock the Notifications