மக்களை ஒரு முறைதான் முட்டாளாக்க முடியும் என்பதை நிரூபித்த பீகார் தேர்தல்- மோடி மீது சிவசேனா தாக்கு!
மும்பை: பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஒருமுறைதான் முட்டாளாக்க முடியும் என்பதை பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகிறது என்று பிரதமர் நரேந்திர மோடியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது சிவசேனா.
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிவசேனா இடம்பெற்றுள்ளது. ஆனால் பாரதிய ஜனதாவை தொடர்ந்து மிகக் கடுமையான சொற்களால் விமர்சித்து வருகிறது சிவசேனா.

பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தோல்வி அடைந்ததற்கு பிரதமர் மோடியே பொறுப்பேற்க வேண்டும் என்று சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் கூறியிருந்தார். இன்று சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் பீகார் தேர்தலை முன்வைத்து பாரதிய ஜனதாவை வெளுவெளு என வெளுத்துக் கட்டியுள்ளது.
சாம்னா தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளதாவது:
டெல்லி சட்டசபை தேர்தலை விட பீகார் தேர்தல் மிக முக்கியமானது. இந்த தேர்தலில் நிதிஷ்குமாருக்கும் நரேந்திர மோடிக்கும் இடையே நேரடி போட்டி இருந்தது.
என்னதான் அதிகாரம், பணம், அறிவிப்புகள் என அனைத்தையும் பயன்படுத்தியபோதும் பாரதிய ஜனதா கட்சியால் 60 இடங்களைக் கூட பெற முடியவில்லை. அதன் கூட்டணிக் கட்சிகளோ 20 அடி படுபாதாளத்தில் புதைந்து போய்விட்டன.
நிதிஷ்குமாரைப் பொறுத்தவரையில் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுக்கவில்லை. குண்டர்கள் ராஜ்ஜியத்தை கட்டுப்படுத்தி சட்டம் ஒழுங்கை நிலைநாட்டினார். அதிகாரத்தையும் பணத்தையும் அவர் பயன்படுத்தவில்லை.
பிரசாரத்தின் போது எளிமையைத்தான் கடைபிடித்தார். நாகரீகமற்ற வார்த்தைகளை அவர் பேசவில்லை. இதுதான் அவரது வெற்றிக்கு காரணம்.
அதிகாரத்தை, பணத்தை வைத்துக் கொண்டு ஒருமுறைதான் தேர்தலில் வெல்ல முடியும். உங்களால் ஒருவரை ஒருமுறைதான் முட்டாளாக்க முடியும்.
பீகாரில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைந்ததற்காக பாகிஸ்தானில் பட்டாசு எதுவும் வெடிக்கவில்லை (தேர்தலில் பா.ஜ.க. தோற்றால் பாகிஸ்தானில் பட்டாசு வெடிப்பார்கள் என பா.ஜ.க. தலைவர் அமித்ஷா பிரசாரத்தின் போது கூறியிருந்தார்). ஆனால் பீகார் மாநிலம் முழுவதிலும் பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன.
இவ்வாறு சாம்னா தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications