குஜராத்தில் டிரைலர், ராஜஸ்தான் இடைவேளை.. 2019ல் பாஜகவுக்கு இருக்கு கிளைமேக்ஸ்: சிவசேனை கடும் தாக்கு
இனி வரும் தேர்தல்கள் பாஜகவின் கிளைமாக்ஸை முடிவு செய்து விடும் என்று சிவசேனை கட்சி பகிரங்கமாக தெரிவித்துள்ளது
மும்பை: பாஜகவிற்கு குஜராத் தேர்தல் டிரைலர், ராஜஸ்தான் தேர்தல் அதிரடி இடைவேளை, 2019-ல் படத்தின் கிளைமாக்ஸ் காண்பிக்கப்படும் என்று பாஜக மீது சிவசேனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
நடப்பாண்டுக்கான பட்ஜெட்டை ஜேட்லி நேற்று தாக்கல் செய்த நிலையில், இது அப்பட்டமான பொது தேர்தலுக்கான பட்ஜெட் என சிவசேனா கட்சி பகிரங்கமாகவே விமர்சனம் செய்தது. மேலும், அதனால்தான் பெரும் நிறுவனங்களில் கவனம் செலுத்தி வந்த மத்திய அரசு, இப்போது விவசாயிகள், சுகாதாரம், கல்வித் துறைகளில் கவனத்தை செலுத்தி உள்ளது என்றும் சிவசேனை கட்சி தெரிவித்தது.

குஜராத் தேர்தல் முடிவின் மூலமாக மக்களிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளதை உணர்ந்த மத்திய அரசு, ராஜஸ்தான் தேர்தல் முடிவின் மூலம் அதனை உறுதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் குஜராத் தேர்தல் டிரைலர் என்றால், ராஜஸ்தான் தேர்தல் அதிரடியான இடைவேளை என்றும் சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ராவத் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாஜக என்ற படத்தின் கிளைமாக்ஸ் வரும் தேர்தல்களில் தெரிந்து விடும் என்றும், பாஜகவை மக்கள் வீட்டிற்கு அனுப்ப முடிவெடுத்து விட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.
2019 -ம் ஆண்டு தேர்தலில் சிவசேனை தனியாக போராடும் என்று எங்கள் தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டது என்றும் அதனை மறுபரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்றும் சஞ்சய் ராவத் தெரிவித்தார். ஒரு முறை விட்ட அம்பு மறுமுறை வில்லுக்கு திரும்புவதில்லை என்றும் அவர் கூறினார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications