பீகார் தேர்தலில் பா.ஜ.க. தோல்விக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும்-சொல்வது 'பங்காளி' சிவசேனா!
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைந்துள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்க வேண்டும் என்று அக்கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா வலியுறுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் சட்டசபை தேர்தலில் எப்படியும் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என கனவில் இருந்தது பா.ஜ.க. ஆனால் பா.ஜ.கவின் கனவு நிறைவேறவில்லை.
When Congress loses then its Sonia ji's responsibility,similarly BJP must accept that #BiharResults is Modi ji's responsibility-Sanjay Raut
— ANI (@ANI_news) November 8, 2015 பீகாரில் மீண்டும் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்- ராஷ்டிரிய ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி அரசு அமைய உள்ளது. இந்த கூட்டணியின் வெற்றிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த வரிசையில் பா.ஜ.க.வின் கூட்டணியில் உள்ள சிவசேனாவும் நிதிஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் கூறியுள்ளதாவது:
நிதிஷ்குமாருக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்துள்ளது. அவர் அரசியலில் ஒரு ஹீரோவாக உருவாகி உள்ளார்.

நிதிஷ்குமாருக்கு எங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். பீகார் தேர்தல் முடிவுகள் நாட்டின் அரசியல் எதிர்காலத்தில் ஒரு திருப்புமுனையாகும்.
தேர்தலில் காங்கிரஸ் தோற்கிற போது அதற்கு சோனியா காந்தி பொறுப்பேற்கிறாரோ அதேபோல் பா.ஜ.க.வின் தோல்விக்கு பிரதமர் மோடிதான் கண்டிப்பாக பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு சஞ்சய் ராவுத் கூறியுள்ளார்.
பீகார் தேர்தலில் சிவசேனாவும் தனித்துப் போட்டியிட்டு படுதோல்வியைத் தழுவியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications