கல்யாண் – டோம்பிவிலி நகராட்சி தேர்தலில் பாஜகவை பின்னுக்கு தள்ளியது சிவசேனா!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் - டோம்பிவிலி ஆகிய நகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் சிவசேனா தனித்துப் போட்டியிட்டு 52 இடங்களை கைப்பற்றி பாஜகவை பின்னுக்கு தள்ளியுள்ளது.
கூட்டணி கட்சிகளான சிவசேனாவும் பாரதீய ஜனதாவும் கல்யாண் - டோம்பிவிலி நகராட்சி தேர்தலில் தனித்து நின்று போட்டியிடுவதால் இந்தத் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

122 வார்டுகளை கொண்ட கல்யாண் - டோம்பிவிலி நகராட்சிகளுக்கு நேற்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை முதலே வாக்குச்சாவடிகளில் திரண்ட வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். நேற்று மாலை நிலவரப்படி 47 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தன.
இந்நிலையில் இந்த தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் சிவசேனா 52 இடங்களையும், பா.ஜ.க 41 இடங்களையும் கைப்பற்றின. ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் சேனா 9 இடங்களிலும், காங்கிரஸ் 4, தேசியவாத காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும் மற்ற கட்சிகள் 11 இடங்களிலும் வெற்றி பெறுள்ளன.
சமீபகாலமாக பாஜகவுக்கும் சிவசேனாவிற்கும் பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. மேலும், பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகுவது குறித்தும் சிவசேனா சிந்தித்து வருகிறது. இந்த நிலையில் இந்த வெற்றி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications