மோடி பேசி விட்டுப் போனதும் இடத்தை "க்ளீன்" செய்த சிவசேனா தொண்டர்கள்!
மும்பை: நாட்டை தூய்மையாக வைத்திருக்கும் பிரசாரத்தை தொடங்கியுள்ளார் பிரதமர் மோடி. ஆனால் அவர் பேசி விட்டுப் போன இடத்தை சுத்தம் செய்து நூதனமாக பதிலடி கொடுத்துள்ளனர் பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு விட்ட சிவசேனா கட்சியின் தொண்டர்கள்.
நரேந்திர மோடி மகாராஷ்டிர மாநில சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தை நேற்று தொடங்கினார். நேற்று மும்பையின் மகாலட்சமி பகுதியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார்.
இன்று காலை அந்த மைதானத்தில் சிவசேனா கவுன்சிலர் அருண் துத்வட்கர் என்பவர் காலையில் வாக்கிங் வந்தார். அப்போது மைதானத்தில் பாஜகவினர் போட்ட குப்பை குவிந்திருப்பதைப் பார்த்தார். இதையடுத்து தனது கட்சியினரை அங்கு வர வைத்தார். அனைவரும் சேர்ந்து அந்த இடத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
ஆளாளுக்கு துடைப்பம், முறம் ஆகியவற்றுடன் அங்கு குவிந்து விட்டனர். அனைத்து குப்பையிலும் ஒரு இடத்தில் சேர்த்து வைத்து பின்னர் அதைதீவைத்துக் கொளுத்தினர்.
நாட்டைத் தூய்மைக்கும் பிரதமர் மோடியின் அழைப்புக்கேற்ப இதைச் செய்ததாக சிவசேனா கட்சித் தொண்டர் ஒருவர் சிரித்தபடி கூறினார்.
கடந்த 25 வருடமாக சிவசேனாவும், பாஜகவும் மகாராஷ்டிராவில் கூட்டணி வைத்திருந்தன. தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இந்த கூட்டணி சமீபத்தில் முறிந்து போனது நினைவிருக்கலாம்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications