மத்தியப் பிரதேச முதல்வராக சிவராஜ்சிங் சவுகான் பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
போபால்: மத்தியப் பிரதேச முதல்வராக சிவராஜ்சிங் சவுகான் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ராம் நரேஷ் யாதவ் பதவியேற்பு செய்து வைத்தார்.
மத்தியப் பிரதேசம் மாநில சட்டசபைத் தேர்தலில், மொத்தமுள்ள 230 தொகுதிகளில் பாஜக 165 தொகுதிகளில் வெற்றி பெற்றது, காங்கிரஸ் 58 இடங்களை கைப்பற்றியது.

இதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில் மூன்றாவது முறையாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆட்சியை கைப்பற்றினார். அவரை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார்.
பின்னர் போபாலில் இன்று நடைபெற்ற விழாவில் சிவராஜ்சிங் சவுகான் முதல்வராக பதவியேற்றார். இவ்விழாவில் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி, மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications