மனிதநேயம் என்ன ஆனது?... விசாகப்பட்டினத்தில் பட்டப்பகலில் மனநலம் பாதித்த பெண் பலாத்காரம்!
விசாகப்பட்டினத்தில் பட்டப்பகலில் சாலை ஓரத்தில் வைத்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான போதும் அதனை யாருமே தட்டிக் கேட்காத கொடுமை நடந்துள்ளது.
விசாகப்பட்டினம் : பட்டபகலில் ரயில் நிலையம் அருகே மனநலம் பாதித்த பெண்ணை குடிபோதையில் இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்வதை பார்த்தும், கதறும் அந்தப் பெண்ணை காப்பாற்ற யாருமே முன்வராத கொடுமையான சம்பவம் அரங்கேறியுள்ளது.
விசாகப்பட்டினம் ரயில் நிலையம் அருகே அமர்ந்து பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறார் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர். நேற்று பிற்பகல் 2 மணியளவில் சாலையோரத்தில் உள்ள மரத்தடியில் அந்தப் பெண் அமர்ந்திருந்துள்ளார்.

அப்போது அந்த வழியாக மது போதையில் வந்த 23 வயது இளைஞர் ஒருவர் அந்தப் பெண்ணை கற்பழித்துள்ளார். உதவிக்காக அந்தப் பெண் கதறிய போதும் அந்த வழியாக சென்ற யாருமே அந்தப் பெண்ணிற்கு உதவ முன்வரவில்லை என்பது தான் கொடுமையின் உச்சம்.
இந்த சம்பவத்தை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தன்னுடைய செல்போனில் படம்பிடித்து போலீசாரிடம் அளித்துள்ளார். ஆட்டோ ஓட்டுநர் பதிவ செய்துள்ள காட்சியில் அந்த இளைஞர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யம் போது அந்த வழியாக சில பாதசாரிகள் சென்ற போதும் அவர்கள் தட்டிக் கேட்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் அளித்த ஆதாரத்தின் அடிப்படையில் பெண்ணை பலாத்காரம் செய்த 23 வயது ஷிவாவை போலீசார் கைது செய்துள்ளனர். எனினும் பட்டபகலில் ஒரு பெண்ணிற்கு நடக்கும் கொடுமையை கண்டும் காணாமல் செல்லும் பாதசாரிகளை பார்க்கும் போது மனிதநேயம் மறித்து போய்விட்டதாக என்ற அச்சம் சமூகத்தின் மீது எழுந்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications