ராஜஸ்தானில் கொடூரம்: 6 வயது சிறுமியை திருமணம் செய்த 35 வயது 'கவுன்சிலர்'
ஜெய்பூர்: ராஜஸ்தானில் 35 வயது நபர் ஒருவர் 6 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட கொடுமை நடந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சிட்டோகர் மாவட்டத்தில் உள்ள கங்கரார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரதன் ஜாட்(35). பஞ்சாயத்து போர்டு உறுப்பினர். அவருக்கும், 6 வயது சிறுமிக்கும் இந்த வார துவக்கத்தில் பந்தோலி அல்லது சோனியானா கிராமத்தில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணம் நடந்த உடன் இருவீட்டாரும் கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள். திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை வாட்ஸ்ஆப்பில் பரவியது. அதன் மூலம் தான் குழந்தை திருமணம் நடைபெற்றது அனைவருக்கும் தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் ரதன் ஜாட் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு கங்கரார் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர். ரதன் ஜாட்டின் திருமணத்தை ரத்து செய்ய நாளை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என்று மாவட்ட கலெக்டர் வேத் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
திருமணம் பற்றி கிராமத்தாரிடம் கேட்டால் யாரும் எந்த தகவலையும் தெரிவிக்க மறுக்கிறார்கள் என்று பிரகாஷ் மேலும் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications