ஆடைகளை களைந்து.. வயல்வெளியில் அக்கிரமம்.. துண்டாக போன "உதடுகள்".. பதறிய ஊர்ஜனம்.. பரிதாப பெண்.. ஐயோ
பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரின் உதட்டை கடித்து துப்பிய பெண்ணை பொதுமக்கள் மீட்டனர்
கான்பூர்: உபியில் நடந்த ஒரு சம்பவத்தை கேள்விப்பட்டு அம்மாநில மக்கள் அதிர்ந்து போயுள்ளனர்.. சம்பந்தப்பட்ட குற்றவாளியை போலீசார் கைது செய்து விசாரித்து கொண்டும் இருக்கிறார்கள்.. என்ன நடந்தது?
2 வருடங்களுக்கு முன்பு, டெல்லியில் ஒரு சம்பவம் நடந்தது.. ரன்ஹோலா என்ற பகுதியை சேர்ந்தவர் கரண்.. 22 வயதான இந்த இளைஞர் ஒரு தெருக்கூத்து கலைஞர்... மனைவி பெயர் காஜல்.. அவருக்கும் 22 வயதுதான்.
அந்த சமயம் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். தன்னுடைய கணவர் அழகாக இல்லாததால், கல்யாணம் ஆனதில் இருந்தே, காஜல், மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார்..

கொட்டிய ரத்தம்
இதனாலேயே கரணை அடிக்கடி திட்டி கொண்டே இருப்பார்.. காஜலே தகராறு செய்துவிட்டு, பிறகு இவரே கரணை சமாதானமும் செய்வார்.. அப்படித்தான் ஒருமுறை தகராறு ஏற்பட்டு சமாதானம் செய்ய முயன்றார்.. அப்போது, கரணுக்கு உதட்டில் முத்தம் கொடுத்த காஜல், திடீரென அவரது நாக்கை கடித்துவிட்டார்.. இதனால், கரணின் நாக்கு, பாதியளவு துண்டானது.. ரத்தம் கொட்டி வலியால் அலறினார்.. அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஆபரேஷன் செய்தாக வேண்டும், ஆனால், அவர் மறுபடியும் வழக்கம்போல் பேசுவாரா என்பது தெரியவில்லை என்றார்கள்.. இது தொடர்பாக காஜலை போலீசார் கைது செய்தார்கள்.. அதற்கு பிறகு அந்த கேஸ் என்ன ஆனது என்றே தெரியவில்லை..

சல்மா
கடந்த வாரம்கூட உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. தாகூர்கன்ச் என்கிற பகுதியை சேர்ந்தவர் முன்னா... இவருடன் சண்டை போட்டுக் கொண்டு, இவருடைய மனைவி சல்மா, தன்னுடைய குழந்தைகளுடன், அவரது அம்மா வீட்டிற்கே சென்றுவிட்டார்.. மாமியார் வீட்டுக்கு அடிக்கடி செல்லும் முன்னா, மனைவியை சமாதானப்படுத்த முயல்வாராம்.. ஆனால், சல்மா தன் பிடிவாதத்தை விடவேயில்லை.. முன்னாவால் தன்னுடைய குழந்தைகளைவிட்டு பிரிந்தும் தனியாக இருக்க முடியவில்லை.. அதனால் சல்மா திட்டுவதையும் தாங்கி கொண்டு, அடிக்கடி குழந்தைகளை பார்க்க செல்வார். அப்படித்தான் சம்பவத்தன்றும் சென்றுள்ளார்.. அவரை பார்த்ததுமே கொந்தளித்து விட்டார் சல்மா.

துண்டான உதடுகள்
குழந்தையை பார்க்க, வீட்டுக்கு வரக்கூடாது என்று பலமுறை சொல்லியும் ஏன் வருகிறாய்? என்று கேட்டு முன்னாவை சரமாரியாக அடித்துள்ளார்.. வலியால் முன்னா அலறினாலும், சல்மாவை திருப்பி தாக்காமல் இருந்துள்ளார்.. ஆனாலும், சல்மா திடீரென்று முன்னாவின் மீது பாய்ந்து, தன் பற்களால் முன்னாவின் நாக்கை கடித்து வெளியே துப்பி இருக்கிறார்... நாக்கு இரண்டாக துண்டாகிவிட்டதால் ரத்தம் அதிகமாக வெளியேறி, அங்கேயே மயங்கி விழுந்திருக்கிறார் முன்னா. இதை கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த முன்னாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. சல்மாவையும் கைது செய்தனர்.

வயல்வெளி
இப்போதும் ஒரு சம்பவம் அதே உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.. மீரட் பகுதியில் கடந்த 4ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.. அந்த இளம் பெண் வயலுக்கு வேலைக்கு சென்றிருந்தார்.. அப்போது ஒரு இளைஞர், அந்த பெண்ணின் பின்னாடியே ஃபாலோ செய்து போயிருக்கிறார்.. ஆள் நடமாட்டமே இல்லாத இடத்துக்கு சென்றதும், அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக புதர் பகுதிக்குள் தரதரவென இழுத்து சென்றுள்ளார்.. இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்து, கதறி உள்ளார்.. அப்போதும் அந்த இளைஞர் வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை தூக்கிகொண்டு, புதர் பக்கம் சென்றிருக்கிறார்.. அங்கே அந்த பெண்ணை சரமாரியாக அடித்து தாக்கி உள்ளார்.. பிறகு ஆடைகளை அவிழ்த்து, பலாத்காரம் செய்யவும் முயன்றிருக்கிறார்.

முத்தம் தந்த பெண்
உடனே, அந்த பெண் சுதாரித்துக்கொண்டார்.. முதலில் முத்தம் தருகிறேன் என்று சொல்லி உள்ளார்.. இதைக்கேட்டதும், அந்த இளைஞரும் சரி என்று சொல்லவும், இவரும் முத்தம் கொடுக்க முயன்றிருக்கிறார். அப்போது திடீரென இளைஞரின் உதட்டை சிதைத்துவிடவும், அந்த இளைஞர் வலியால் கதறி துடித்திருக்கிறார்.. புதருக்குள் இழுத்து செல்லும்போது அந்த பெண் அலறிய சத்தத்தைவிட, இந்த இளைஞரின் சத்தம் அந்த பகுதி முழுக்க எதிரொலித்தது.. வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள் உதவிக்கு ஓடிவந்தனர்.. இளம் பெண்ணை பத்திரமாக மீட்டனர்.. இளைஞரையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்... உடனடியாக இளைஞருக்கு சிகிச்சை தரப்பட்டது.. ஆனால், பாலியல் வன்கொடுமை கேஸில் போலீசார் அவரை கைது செய்து, உள்ளே தூக்கி வைத்துள்ளனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications