தமிழகத்துக்கு இப்படி ஒரு முதல்வர் இல்லாமல் போனது வேதனை!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தமிழகத்திற்கு இப்படி ஒரு முதல்வர் இல்லாமல் போய்விட்டதே!- வீடியோ

    பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு உண்மையிலேயே கர்நாடக விவசாயிகள் நன்றிக் கடன் பட்டுள்ளனர். சித்தராமையாவை இந்த விஷயத்தில் கர்நாடக விவசாயிகள் கோவில் கட்டிக் கொண்டாடலாம். அந்த அளவுக்கு அவர்களுக்காக பாடுபட்டுள்ளார் சித்தராமையா.

    இன்று கர்நாடகத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதற்கு சித்தராமையாவும் முக்கியக் காரணம். இந்த விஷயத்தில் அவர் மாநில முதல்வராக நடந்து கொள்ளவில்லை. மாறாக ஒரு விவசாயியாக மாறி விட்டார். விவசாயிகளின் உணர்வை உள்வாங்கி அத்தனை ஆர்வமாக இதில் அக்கறை காட்டினார்.

    கர்நாடகத்தில் பலர் முதல்வராக இருந்துள்ளனர். ஆனால் சித்தராமையா இந்த வழக்கில் காட்டிய ஆர்வம் ஆக்கப்பூர்வமானதாக இருந்தது. அவர் எடுத்த முடிவுகள் அனைத்துமே தமிழகத்திற்கு எதிரானதுதான். ஆனால் தனது மாநில நலன் என்று மட்டுமே அவர் பார்த்தார், செயல்பட்டார்.

    ஈகோ பார்க்காமல் செயல்பட்டார்

    ஈகோ பார்க்காமல் செயல்பட்டார்

    ஒரு முதல்வராக என்றுமே ஈகோ பார்த்ததில்லை சித்தராமையா. தேவையான போதெல்லாம் டெல்லிக்குப் படையெடுத்தார். வக்கீல்கள் குழுவை சந்தித்து ஆலோசனை நடத்தியபடியே இருந்தார்.

    வக்கீலைப் பார்க்க ஓடி வந்தவர்

    வக்கீலைப் பார்க்க ஓடி வந்தவர்

    டெல்லிக்குப் போய் கர்நாடக அரசின் வக்கீலான பாலி நாரிமனை பார்த்து வழக்கு குறித்து விவாதித்தவர் சித்தராமையா. எந்த முதல்வராவது இப்படி போய் ஒரு வக்கீலைப் பார்த்துப் பேசிய வரலாற்ற தமிழகம் கண்டதுண்டா.?

    உணர்வு நிரம்பியவர்

    உணர்வு நிரம்பியவர்

    அதுதான் உணர்வு என்பது. நமது விவசாயிகள் கஷ்டப்படுகிறார்களே என்ற உணர்வு உந்தித் தள்ளியதால் இப்படி ஈகோ பார்க்காமல் செயல்பட்டவர் சித்தராமையா. ஆனால் தமிழகத்தில் ஈகோ பார்க்காத ஒரு முதல்வரை நாம் பார்த்தே பல மாமாங்கம் ஆகி விட்டதே!

    பாராட்டப்பட வேண்டிய முதல்வர்

    பாராட்டப்பட வேண்டிய முதல்வர்


    உண்மையில் கர்நாடக விவசாயிகள் கொடுத்து வைத்தவர்கள். அரசியல் செய்யாமல் தங்களுக்காக செயல்பட்ட, மாற்றுக் கட்சியினரிடமும் இறங்கிப் போய் பேசி அவர்களது ஆதரவையும் பெற்று செயல்பட்ட சித்தராமையாவை கர்நாடக மக்கள் நிச்சயம் பாராட்டவே செய்வார்கள்.

    தமிழக முதல்வர்...?

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+