சித்தராமையாவின் தேவையற்ற ஆணவப் பேச்சாலேயே மக்கள் அவரை நிராகரித்துள்ளனர்: ஜி.டி தேகவுடா
சித்தராமையாவின் தேவையற்ற ஆணவப் பேச்சாலேயே மக்கள் அவரை நிராகரித்துள்ளனர் என்று ஜி.டி தேகவுடா தெரிவித்துள்ளார்.
Recommended Video

பெங்களூரு: சித்தராமையாவின் தோல்விக்குக் காரணம் அவரது தேவையற்ற, ஆணவப் பேச்சுக்களே காரணம் என்று சாமுண்டீஸ்வரி தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர் ஜி.டி தேவகவுடா தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டசபைக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது. தற்போதைய நிலையில் புதிய அரசியல் திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன.

பாதாமி தொகுதியில் சித்தராமையா வெற்றி பெற்றுள்ள நிலையில், சாமுண்டீஸ்வரி தொகுதியில் 17000 வாக்குகள் வித்தியாசத்தில் மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர் ஜி.டி தேவகவுடாவை விட பின் தங்கி இருக்கிறார்.
People have rejected Siddaramaiah. He lost because of his attitude, because of attacking everyone & because of his loose talk: GT Devegowda, JD(S) candidate who is leading over Siddaramaiah in Chamundeshwari by 17000 votes. pic.twitter.com/6Sw82tiBgs
— ANI (@ANI) May 15, 2018
இதுகுறித்து ஜி.டி தேவகவுடா கூறுகையில், சித்தராமையாவை மக்கள் நிராகரித்துள்ளனர். இதற்குக் காரணம் அவரது தேவையற்ற ஆணவப்பேச்சுகள்தான் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications