பெண்களுக்கான இலவச பேருந்து பயணம்! சித்தராமையா சொன்ன பதில்! விழுந்து விழுந்து சிரித்த அமைச்சர்கள்
பெங்களூர்: கர்நாடகாவில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் குறித்து சந்தேகங்கள் எழுந்த நிலையில், இது குறித்து முதல்வர் சித்தராமையா அளித்த பதில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் 5 வாக்குறுதிகளை முக்கியமாக அளித்திருந்தது. இதற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. தேர்தல் வெற்றிக்கு இந்த வாக்குறுதிகளும் முக்கியமானதாக இருந்தது.

இதற்கிடையே இந்த 5 வாக்குறுதிகளும் இந்தாண்டு நிறைவேற்றப்படாது என்று தகவல் வெளியான நிலையில், அதை மறுத்துள்ள சித்தராமையா 5 வாக்குறுதிகளும் நடப்பு நிதியாண்டில் செயல்படுத்தப்படும் என்று உறுதியாகத் தெரிவித்தார்.
நேற்றைய தினம் கர்நாடக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா 5 வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.
அப்போது பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு முதல்வர் சித்தராமையா காமெடியான பதிலைக் கொடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
தமிழ்நாட்டில் அனைத்து பெண்களுக்கும் மாநகர சாதாரண பேருந்தில் பயணிக்க இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கர்நாடகாவில் அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோருக்கு இத்திட்டம் பொருந்தாது என்று தகவல்கள் வெளியானது.
இது குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த சித்தராமையா, "அதெல்லாம் இல்லை.. அனைவருக்கும் இந்த திட்டம் பொருந்தும்.. என் மனைவிக்கும் கூட பஸ் பயணம் இலவசம் தான்" என்று காமெடியாக கூறினார். இந்த பதிலை யாருமே எதிர்பார்க்கவில்லை...

இதைக் கேட்டவுடனேயே அங்கிருந்த அமைச்சர்கள் செய்தியாளர்கள் என அனைவரும் வாய்விட்டுச் சிரித்துவிட்டனர். அதன் பிறகு சில நொடி இடைவெளி விட்ட அவர், "கர்நாடக தலைமைச் செயலாளருக்கும் இலவச பஸ் திட்டம் பொருந்தும்" என்று தெரிவித்தார்.
இப்போது கர்நாடக தலைமைச் செயலாளராக வந்திதா சர்மா என்ற பெண் இருக்கிறார். அதாவது அரசு ஊழியர் தொடங்கி அனைவருக்கும் இத்திடம் பொருந்தும் என்பதையே முதல்வர் சித்தராமையா நகைச்சுவையாகும் அனைவருக்கும் புரியும்படியும் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
கர்நாடகா புது முதல்வர் யார்? டிகே சிவக்குமார் பெயரை சொல்ல மறுத்த சித்தராமையா! அழிக்கப்பட்ட மெசேஜ் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications