கடவுளே வந்து சொன்னாலும் இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்- சித்தராமையா திடீர் முடிவு
கடவுளே வந்து சொன்னாலும் இனி தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று சித்தராமையா தெரிவித்தார்.
Recommended Video

பெங்களூர்: கடவுளே வந்து சொன்னாலும் இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் எனினும் அரசியலில் ஈடுபடுவேன் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
கர்நாடக மாநிலத்தில் நேற்று சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள 2 தொகுதிகளுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 15-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கு முன்பும், தேர்தலுக்கு பின்பும் 130 தொகுதிகளுக்கு மேல் பெறுவோம் என்று பாஜகவும் காங்கிரஸும் கூறிக் கொள்கின்றன.

கடவுளே வந்து சொன்னாலும் சரி
ஆனால் கருத்து கணிப்புகளோ எந்த கட்சிக்கும் தனிபெரும்பான்மை கிடைக்காது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சித்தராமையா செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில் கடவுளே வந்து சொன்னாலும் இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்.

அவப்பெயர்
நான் இந்த முறையே தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றிருந்தேன். ஆனால் முதல்வராக இருந்து விட்டு போட்டியிடாமல் விட்டால் அவப்பெயர் ஏற்படும் என்பதால் போட்டியிட்டேன்.

முதல்வர் பதவி
இனிமேல் தேர்தல்களில் போட்டியிடாவிட்டாலும், அரசியலில் தொடருவேன்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்கத் தயாராக உள்ளேன்.

வித்தியாசத்தில் வெற்றி
தாழ்த்தப்பட்ட ஒருவரை முதல்வராக கட்சி தலைமை ஏற்றுக் கொண்டால் எனக்கு சம்மதம்தான். சாமுண்டீஸ்வர், பதாமி தொகுதியில் ஓரளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றார் சித்தராமையா.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications