சிக்கிம் மாநிலத்தின் விளம்பரத் தூதுவராக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு
சிக்கிம் மாநில அரசு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை அம்மாநிலத்தின் விளம்பரத் தூதுவராக அறிவித்துள்ளது.
Recommended Video

உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிக்கிம் மாநிலத்தின் விளம்பரத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதாக சிக்கிம் மாநில அரசு அறிவித்துள்ளது.
சிக்கிம் மாநில தலைமைச் செயலர் கே.ஸ்ரீவஸ்தவா இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் சிக்கிம் மாநிலத்தின் சாதனைகளை ஊக்குவித்து, தேசிய அளவிலும் உலகளவிலும் முன்னெடுத்துச் செல்வார் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இருபது ஆண்டுகளாக, சிக்கிம் மாநிலம் அதன் இற்கை எழில்கொஞ்சும் அழகுக்காக உலகளவில் அழகிய இயற்கைச் சுற்றுலாப் பிரதேசமாக புகழ்பெற்றுள்ளது. மேலும், நாட்டின் முதல் முழுமையான இயற்கை வேளாண்மையை நோக்கி சென்று கொண்டிருக்கும் மாநிலம் என்று அம்மாநில அரசு திங்கள் கிழமை கூறியது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் சிக்கிம் மாநிலத்தின் சுற்றுலா மற்றும் வணிகத்துறை விளம்பரத் தூதுவராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications