ஆரோக்கியமான நாடுகள்: முதலிடத்தில் சிங்கப்பூர்... "ஆம்புலன்ஸில்" போகும் இடத்தில் இந்தியா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சர்வதேச அளவில் ஆரோக்கியமான மக்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது.

இந்தப் பட்டியலில் இந்தியாவிற்கு 103வது இடம் தான் கிடைத்துள்ளது.

சர்வதேச அளவில் ஆரோக்கியமான மக்கள் கொண்ட நாடுகளின் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி மற்றும் உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது.

10 லட்சம் பேர்...

10 லட்சம் பேர்...

பிறப்பு, இறப்பு விகிதங்கள், மரணத்திற்கான காரணங்கள், இளைய தலைமுறையினரிடையே நிலவி வரும் புகைப்பழக்கம், அதிக கொழுப்பு உள்ளிட்ட பிரச்சனைகளால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகள் மற்றும் நோய்த்தடுப்பு திட்டங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சர்வதேச அளவில் 10 லட்சம் மக்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

சிங்கப்பூர் முதலிடம்...

சிங்கப்பூர் முதலிடம்...

இந்த ஆய்வில் 89.45 சதவீதம் நல்ல விஷயங்களைப் பெற்று சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களை முறையே இத்தாலி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பிடித்துள்ளன.

103வது இடத்தில் இந்தியா...

103வது இடத்தில் இந்தியா...

சர்வதேச அளவில் ஆரோக்கியமான மக்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் 22.17 சதவீதத்துடன் இந்தியா 103-வது இடத்தைப் பெற்றுள்ளது.

சாப்பாடு தான் காரணம்...

சாப்பாடு தான் காரணம்...

இவ்வாறு மக்களின் ஆரோக்கியம் குறைந்து போவதற்கு அவர்கள் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளாததே முக்கியக் காரணம் என்கிறது இந்த ஆய்வு. மக்களின் உணவுப் பழக்கம் மாறி தற்போது பழங்கள், பச்சைக் காய்கறிகளை விட அதிகளவில் ஜங்க் வகை உணவுகளை எடுத்துக் கொள்வதாக இந்த ஆய்வு குற்றம் சாட்டுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+