பாக். பாடகர் அட்னன் சமிக்கு இந்திய குடியுரிமை வழங்குகிறது மத்திய அரசு?
டெல்லி: பாகிஸ்தான் பாடகர் அட்னன் சமி விடுத்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கக் கூடும் என தெரிகிறது.
பாகிஸ்தானின் லாகூரில் பிறந்த அட்னன் சமி கான், 2001-ம் ஆண்டு மார்ச் 13-ந் தேதி விசிட்டர் விசா மூலம் இந்தியாவுக்கு வந்தார். அதன் பிறகு அவர் தொடர்ந்து இந்தியாவிலேயே தங்கி விசாவைப் புதுப்பித்து வருகிறார்.

பாலிவுட் பாடகரான அட்னன் சமியின் பாஸ்போர்ட் 2010ம் ஆண்டு மே 27ந் தேதி காலாவதியானது. அதைப் புதுப்பிக்க பாகிஸ்தான் அரசு மறுத்து விட்டது.
இதனால் அவர் இந்திய அரசின் உதவியை நாடினார். மனிதாபிமான அடிப்படையில் தான் தொடர்ந்து தங்க அனுமதி கோரினார். கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு அவருக்கு அனுமதி கொடுத்தது.
தற்போது தமக்கு இந்திய குடியுரிமையும் வழங்க வேண்டும் என்று அட்னன் சமி மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்துக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசு இந்த கோரிக்கையை ஏற்று அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications