Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘பலே பலே பாகுபலி‘ பாடகர் தலர் மெஹந்திக்கு ஆள் கடத்தல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறை!

ஆள் கடத்தல் வழக்கில் பாடகர் தலர் மெஹந்தி குற்றவாளி என பஞ்சாப் பட்டியாலா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

பட்டியாலா: ஆள் கடத்தல் வழக்கில் பாடகர் தலர் மெஹந்தி குற்றவாளி என பஞ்சாப் பட்டியாலா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆள் கடத்தல் வழக்கில் பிரபல பாடகர் தலர் மெஹந்தி குற்றவாளி என பஞ்சாப் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2003ம் ஆண்டில் ஆள் கடத்தல் வழக்கில் தலர் மெஹந்திக்கு பஞ்சாப் பட்டியாலா நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தலர் மெஹந்தி தனது குழுவினர் என கூறி சட்டவிரோதமாக மக்களை வெளிநாடுகளுக்கு பணத்திற்கு கடத்தியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு பஞ்சாப் மாநிலம் பட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

சகோதரர்கள் மீது புகார்

சகோதரர்கள் மீது புகார்

தலர் மெஹந்தி மற்றும் அவரது சகோதரர் ஷாம்ஷர் சிங் 1998 மற்றும் 1999ஆம் ஆண்டுகளில் சட்டத்திற்கு புறம்பாக 10 பேர் கொண்ட குழுக்கள் அமெரிக்காவுக்கு கடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

35 புகார்கள்

35 புகார்கள்

தனது குழுவினர் என அழைத்து செல்பவர்களை மெஹந்தி அங்கேயே காசுக்காக விட்டுவிட்டு வந்ததாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக தலர் மெஹந்தி மற்றும் அவரது சகோதரர் மீது சுமார் 35 புகார்கள் குவிந்தன.

2 ஆண்டுகள் சிறை

2 ஆண்டுகள் சிறை

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் ஆள்கடத்தல் வழக்கில் தலர் மெஹந்தி குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது. மேலும் தலர் மெஹந்திக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்துள்ளது.

ஒரு மணி நேரத்தில் ஜாமீன்

ஒரு மணி நேரத்தில் ஜாமீன்

ஆனால் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருமணி நேரத்தில் தலர் மெஹந்திக்கு பாட்டியாலா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. தனித்துவமான குரலுடன் உணர்ச்சிமிகு பாடல்களை வழங்கி வரும் பாப் இசை பாடகர் தலர் மெகந்தி, சமீபத்தில் வெளியான பாகுபலி படத்தில் பலே பலே பாகுபலி என்ற ஹிட் பாடலை பாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+