விமானத்தில் நான் பாடியதற்காக ஏர்ஹோஸ்டஸ்கள் சஸ்பெண்டா.. இதுதான் சகிப்பின்மை: சோனு நிகாம்!
மும்பை: விமானத்தில் என்னை பாட வைத்ததற்காக விமான ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது என்னை பொறுத்தவரை உண்மையான சகிப்பின்மையை காட்டுகிறது என பிரபல பாலிவுட் பாடகர் சோனு நிகாம் வேதனை தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் பிரபல பாடகர் சோனு நிகாம். இவர் கடந்த மாதம் நான்காம் தேதி, ஜோத்பூரிலிருந்து மும்பை வந்த விமானத்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அவருடன் பயணித்த மற்ற பயணிகள், சோனுவைப் பாடல் பாடும்படி கேட்டு நச்சரித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவரும் இரண்டு பாடல்களைப் பாடியுள்ளார்.

அனைவருக்கும் கேட்க வேண்டும் என்ற காரணத்தால், விமானத்தில் பயணிகளுக்கு அறிவிப்பு செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த மைக்கில் அவர் பாடியுள்ளார்.
சோனுவின் பாடலைக் கேட்டு உற்சாகமடைந்த சகபயணிகள், தாங்களும் அவருடன் சேர்ந்து பாடியுள்ளனர். அதனைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த சோனு, ‘வாவ் உங்கள் அனைவருக்குள்ளும் ஒரு பாடகர் இருக்கிறார்' எனப் பாராட்டியுள்ளார்.
சோனுவும், மற்ற பயணிகளும் பாடும் காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, சமூகவலைதளப் பக்கங்களில் வைரலாகப் பரவியது.
அதனைத் தொடர்ந்து, விமான ஊழியர்களின் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த மைக் உள்ளிட்ட அறிவிப்பு சாதனத்தை எப்படி பயணிகள் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தலாம் எனக் கண்டனம் எழுந்தது.
அதன் தொடர்ச்சியாக விமான பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ இது குறித்த விசாரணையை முடுக்கிவிட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட 5 பணிப்பெண்களையும் சஸ்பெண்ட் செய்து ஜெட் ஏர்வேஸ் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து சோனு நிகாம் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், ‘விமானத்தில் இதுபோன்று சில கச்சேரிகள், வேடிக்கை நிகழ்சிகள் என மற்ற நாடுகளில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால், என்னை பாட வைத்ததற்காக விமான ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது என்னை பொறுத்தவரை உணமையான சகிப்பின்மை' எனத் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications