கூட்டணி ஆட்சிக் காலம் மலையேறி விட்டது.. ஒற்றைக் கட்சி ஆட்சியே சிறந்தது: பிரதமர் மோடி
மும்பை: இந்தியாவில் கூட்டணி ஆட்சிக் காலம் மலையேறிவிட்டது..இனி ஒற்றைக் கட்சி தலைமையில் அமையும் அரசால் மட்டுமே நல்லாட்சி வழங்க முடியும் என்று தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு வரும் 15-ந் தேதி தேர்தல் நடைபெறுகின்றது. இந்த தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து அங்குள்ள கோண்டியா பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:

சுரண்டிய காங். கூட்டணி
மகாராஷ்டிராவில் 15 ஆண்டுகளாக ஆட்சி நடத்திய காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி, இந்த மாநிலத்தின் பணத்தை மட்டும் சுரண்டவில்லை. பெருமையையும் சேர்த்து சுரண்டி எடுத்து விட்டது.

குதித்த தேசியவாத காங்.
அந்த கூட்டணி அரசானது, மூழ்கும் கப்பல் என்பதை உணர்ந்ததும், தேசியவாத காங்கிரஸ் கட்சி அந்த கப்பலில் இருந்து குதித்து விட்டது.

ஒற்றைக் கட்சி ஆட்சி
மத்தியில் ஒற்றைக் கட்சியின் தலைமையிலான ஆட்சி நடைபெறுவதால் இது நிலையான ஆட்சி என்பதை ஒட்டுமொத்த உலகமே உணர்ந்துக் கொண்டுள்ளது.

மகாராஷ்டிராவிலும் பாஜக ஆட்சி
உங்களுக்கு முன்னேற்றம் தேவை என்றால், அதற்கு ஒற்றைக் கட்சியின் தலைமையிலான ஆட்சி முறைதான் சிறந்தது. மத்தியில் பா.ஜ.க.ஆட்சி, மகாராஷ்டிராவிலும் பா.ஜ.க. ஆட்சி என்றிருந்தால் அது எல்லா வகையிலும் பொருத்தமான ஆட்சியாக இருக்கும்.

மலையேறிய கூட்டணி ஆட்சி
கூட்டணி ஆட்சிக் காலம் எல்லாம் மலையேறி விட்டது. ஒற்றைக் கட்சியின் தலைமையில் அமையும் அரசால் மட்டுமே நல்லாட்சியை வழங்க முடியும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications