மே.வங்க தேர்தலில் மம்தாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய சிவசேனா...'வங்கத்தின் உண்மையான புலி' என புகழாரம்!
கொல்கத்தா: பாஜகவின் நீண்டநாள் நண்பனாக இருந்து எதிரியாக மாறிய சிவசேனா, வருகிற சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்துள்ளது.
மம்தா தீதி(அக்கா) ஒரு கர்ஜிக்கிற வெற்றி பெற நாங்கள் விரும்புகிறோம். மம்தா பானர்ஜிதான் வங்காளத்தின் உண்மையான புலி என்று சிவசேனாவின் சஞ்சய் ரவுத் கூறினார்.
மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக-திரிணாமுல் இடையே போட்டி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

மேற்கு வங்க தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது
தமிழகத்தைப்போல் மேற்கு வங்க தேர்தல் களமும் சூடுபிடித்துள்ளது. அங்கு இந்த முறை ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்பது பாஜகவின் நீண்ட நாள் சபதம். இதற்கு பல முன்பே திட்டம் வகுத்து விட்டார் அமித்ஷா. இதற்காக திரிணாமுல் கட்சியின் கூடாரத்தில் இருந்து ஒவ்வொருவராக பாஜக பக்கம் கொண்டு வந்தார். மம்தாவின் வலது கரமாக விளங்கிய சுவேந்து அதிகாரி உள்பட பல மூத்த தலைவர்கள் அமித்ஷா சொல் கேட்கும் கிளிப்பிள்ளையாக அப்படியே பாஜக பக்கம் ஒதுங்கினர்.

பாஜக-திரிணாமுல் விறுவிறு போட்டி
தொடர்ந்து பிரதமர் மோடி, அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா என்று மொத்த பாஜக அணியே மேற்கு வங்கத்தில் வலம் வந்தது. ஆனால் தான் எதற்கும் சளைத்தளவர் அல்ல என்பதை மம்தா நிரூபித்தார். பாஜகவுக்கு எதிராகவும், தனது கட்சியில் இருந்து சென்றவர்களுக்கு எதிராகவும் வீறு கொண்டு முழங்கினார் மம்தா. கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி மற்றும் சில பிரபல பெங்காலி நடிகர்களை தன்பக்கம் இழுத்துக் கொண்டார். இவ்வாறு பாஜக-திரிணாமுல் இடையே போட்டி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

திரிணாமுலுக்கு சிவசேனா ஆதரவு
இந்த நிலையில் பாஜகவின் நீண்டநாள் நண்பனாக இருந்து எதிரியாக மாறிய சிவசேனா, வருகிற சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ரவுத் கூறியதாவது:- மேற்கு வங்கத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரசுக்கு ஆதரவு கொடுக்க உள்ளோம்.

உண்மையான வங்காள புலி
இந்த முறை தீதி(அக்கா) Vs அனைவருக்குமான சண்டையாகத் தோன்றுவதை எதிர்த்துப் போட்டியிடப் போவதில்லை. மம்தா தீதி(அக்கா) ஒரு கர்ஜிக்கிற வெற்றி பெற நாங்கள் விரும்புகிறோம். மம்தா பாணர்ஜிதான் வங்காளத்தின் உண்மையான புலி என்று சஞ்சய் ரவுத் கூறினார். சிவசேனா ஆதரவு தெரிவித்து இருப்பது மூலம் திரிணாமுல் காங்கிஸ் கட்சிக்கு கூடுதல் பலம் கிடைத்துளளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications