மும்பை: கடலில் மூழ்கி 6 வர்த்தகர்கள் பலி... சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்
மும்பை: மும்பை அருகே கடலில் குளிக்க சென்ற ஆறு வர்த்தகர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் உள்ள செம்பூர் பகுதியைச் சேர்ந்த பதினைந்து வர்த்தகர்கள், நேற்று ஒரே குழுவாக இணைந்து ராய்ஹட் மாவட்டத்தில் உள்ள முரட் பகுதியில் உள்ள ஏகடாரா கடற்கரைக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.
கடலில் இறங்கி அவர்கள் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஆறு பேர் நீரில் மூழ்கினர். நண்பர்கள் கடல் நீரில் மூழ்குவதைக் கண்ட மற்ற வர்த்தகர்கள் உதவி கேட்டு உரக்க சத்தமிட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது.
ஆனபோதும், நீரில் மூழ்கியவர்களை மீட்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. பின்னர் மதியம் சுமார் 2 மணி அளவில் நீரில் மூழ்கிப் பலியான ஆறு பேரின் உடல்களும் ஒன்றன் பின் ஒன்றாக கரை ஒதுக்கியது.
நீரில் மூழ்கிப் பலியானவர்களின் உடல்கள் தற்போது முரட் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications