பனிச்சரிவில் புதைந்த ராணுவ முகாம்... 6 வீரர்கள் பலியான பரிதாபம்
ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய ராணுவ முகாமில் இருந்த விரர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிச்சரிவு நிலவி வருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குரேஸ் பகுதியில் இன்று காலை பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் பனிச்சிகரத்தின் அடிவாரத்தில் செயல்பட்டு வந்த ராணுவ முகாம் பனியால் மூடப்பட்டது.
இந்த விபத்தில் முகாமில் இருந்த ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
பனிச்சரிவவில் சிக்கி 6 வீரர்கள் பலியாகியுள்ளதாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
பனிச்சரிவில் எத்தனை வீரர்கள் சிக்கியுள்ளனர் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. தொடர்ந்து பனி கொட்டி வருவதால் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications