தடம்புரண்ட ரயில் பெட்டிக்குள் சிக்கி ஒன்றரை மணிநேரமாக அழுத 6 மாத குழந்தை மீட்பு

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் தடம் புரண்ட ரயில் பெட்டிக்குள் சிக்கியிருந்த 6 மாத குழந்தை 90 நிமிடங்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலம் தெற்கு மும்பையில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள நாகோதானே என்ற இடத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த திவா-சாவந்த்வாடி பயணிகள் ரயில் இன்று காலை 9.40 மணி அளவில் தடம்புரண்டது. 4 பெட்டிகள் தடம் புரண்டதில் 15 பேர் பலியாகினர், 87 பேர் காயம் அடைந்தனர்.

Six-month-old baby rescued 90 minutes after train derails in Maharashtra

இந்நிலையில் தடம்புரண்ட பெட்டி ஒன்றுக்குள் இருந்து குழந்தை அழும் சத்தம் வந்து கொண்டிருந்தது. வெளியே நின்ற குழந்தையின் குடும்பத்தார் அதை காப்பாற்றுமாறு கதறிக் கொண்டிருந்தார்கள். இதையடுத்து உள்ளூர்வாசிகள் சிலர் லாவமாக அந்த பெட்டிக்குள் சென்று குழந்தையை பத்திரமாக மீட்டு வந்தனர்.

90 நிமிடங்கள் கழித்து மீட்கப்பட்ட 6 மாத குழந்தை காயம் இன்றி தப்பித்தது. இருப்பினும் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+